Published : 19 Jan 2021 07:06 AM
Last Updated : 19 Jan 2021 07:06 AM

நாடுமுழுவதும் 27 நகரங்களில் 1,000 கி.மீ. மெட்ரோ ரயில் பாதை: அகமதாபாத் அடிக்கல் நாட்டு விழாவில் காணொலியில் பேசிய பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி

நாடு முழுவதும் 27 நகரங்களில் 1,000 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் அகமதாபாத்தில் 2-ம் கட்டமாக ரூ.5,384 கோடியில் 28.25 கி.மீ. தொலைவுக்கும் சூரத் நகரில் ரூ.12,020 கோடியில் 40.35
கி.மீ. தொலைவுக்கும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படு கிறது. இந்த திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த கால ஆட்சியில் சுமார் 12 ஆண்டுகளில் 225 கி.மீ. தொலை வுக்கு மட்டுமே மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டது. மத்தியில்
கடந்த 2014-ல் பாஜக ஆட்சி பொறுப் பேற்ற பிறகு கடந்த 6 ஆண்டுகளில் 450 கி.மீ. தொலைவுக்கு அமைக் கப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் 27 நகரங்களில் 1,000 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

அனைத்து வகையான போக்கு வரத்துக்கும் ஒரே அட்டையை பயன் படுத்தும் வகையில் புதிய திட்டம் வரையறுக்கப்பட்டு வருகிறது.
உலகில் அதிவேகமாக வளர்ச்சி அடையும் நகரமாக குஜராத்தின் சூரத் உருவெடுத்துள்ளது. ஜவுளி துறையின் மையமாக இந்த நகரம்
மாறியுள்ளது. உலகளாவிய அள வில் தயாராகும் 10 வைரங்களில் 9 வைரங்கள் சூரத்தில் பட்டை தீட்டப்படுகின்றன. ஒரு காலத்தில் சூரத் மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் குடிசைகளில் வாழ்ந் தனர். இந்த எண்ணிக்கை தற்போது 6 சதவீதமாக குறைந்திருக்கிறது. தங்கள் வாழ்வை வளமாக்கி கொள்ள இந்தியா முழுவதும் இருந்து ஏராளமானோர் சூரத் நகருக்கு வருகின்றனர்.

குஜராத் தலைநகர் காந்திநகர் ஒரு காலத்தில் அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்றோரின் நகரமாக இருந் தது. தற்போது காந்தி நகரின் அடை யாளம் மாறியுள்ளது. ஐஐடி, சட்டக் கல்லூரி, பெட்ரோலிய பல்கலைக் கழகம், திருபாய் இன்ஸ்டிடியூட் என காந்திநகர், கல்வி மைய மாக உருவெடுத்துள்ளது. இளை ஞர்களின் நகரமாக மாறியுள்ளது. கல்வி, வேலைவாய்ப்புக்காக ஏராளமான இளைஞர்கள் காந்தி நகரில் குவிந்து வருகின்றனர்.

உலகின் பாரம்பரிய நகர அந் தஸ்து அகமதாபாத்துக்கு கிடைத் துள்ளது. பழம் பெருமைகள் மாறா மல் அகமதாபாத் நகரம் புதுப்
பொலிவு பெற்று வருகிறது. உலகின் மிகப்பெரிய மைதானம், நவீன ரயில் நிலையம், 6 வழிச்சாலை என அகமதாபாத் நவீனமயமாகி வருகிறது. அடுத்த கட்டமாக அகமதாபாத், சூரத், மும்பையை இணைக்கும் புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

21 லட்சம் பேர்

குஜராத்தின் 80 சதவீத வீடு களுக்கு குழாய் மூலம் குடிநீர் விநி யோகம் செய்யப்படுகிறது. வறட்சி பாதித்த பகுதிகளுக்கும் நர்மதை நதி நீர் கொண்டு செல்லப்பட்டு அந்த பகுதிகள் பாசன வசதியை பெற்றுள்ளன. சூரிய மின் உற் பத்தியில் குஜராத் முன்னிலையில் உள்ளது. ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்தில் மாநிலத்தில் இதுவரை 21 லட்சம் பேர் பலன் அடைந்துள்ளனர். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 35 லட்சம் கழிப்பறைகள் கட்டுப்பட்டுள்ளன.

உலகின் மிக உயரமான சிலை இந்தியாவில் அமைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய வீட்டு வசதி திட்டம், மருத்துவ காப்பீடு திட்டம்,
கரோனா தடுப்பூசி திட்டம் இந்தியா வில் செயல்படுத்தப்படுகின்றன.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x