Last Updated : 18 Jan, 2021 11:07 AM

 

Published : 18 Jan 2021 11:07 AM
Last Updated : 18 Jan 2021 11:07 AM

ரயில் நிலையங்களில் மீண்டும் ஈ-கேட்டரிங் சேவைகள் விரைவில் தொடக்கம்

கிழக்கு ரயில்வே மண்டலங்களில் அமைந்துள்ள ரயில் நிலையங்களில் மீண்டும் ஈ-கேட்டரிங் சேவைகள் விரைவில் தொடங்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரோனா ஊரடங்கு காலத்தில் மூடப்பட்டிருந்த ரயில்வே கேட்டரிங் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளன. இதுகுறித்து கொல்கத்தாவில் கிழக்கு மண்டல ரயில்வே செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

கோவிட் -19 பரவுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இடைநிறுத்தப்பட்ட இ-கேட்டரிங் சேவைகளின் கீழ் ரயில்களில் பயணிகளுக்கு சமைத்த உணவு வழங்கல் முறைகள் விரைவில் கிழக்கு ரயில்வே மண்டலத்தில் மீண்டும் தொடங்கப்பட உள்ளது..

கிழக்கு ரயில்வே அதிகார எல்லைக்குட்பட்ட ஹவுரா, சீல்டா, கொல்கத்தா, துர்காபூர், அசன்சோல், மால்டா மற்றும் பாகல்பூர் நிலையங்களில் இ-கேட்டரிங் சேவைகள் விரைவில் மீண்டும் தொடங்கப்படும்.

இ-கேட்டரிங் சேவைகள் வழங்கப்படும் நிலையங்களின் பட்டியலில் மேலும், பர்தாமன், போல்பூர் மற்றும் ஜமல்பூர் ஆகிய ரயில்நிலையங்களை சேர்க்கும் திட்டங்கள் உள்ளன.

பல நீண்ட தூர மற்றும் சிறப்பு ரயில்களை மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன. இதனால், 'ஐ.ஆர்.சி.டி.சியின் பரிந்துரைக்கப்பட்ட விற்பனையாளர்களால் ரயில்களில் பயணிகளுக்கு சூடான, ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான உணவை வழங்குவதற்கான சேவைகளை மீண்டும் தொடங்க வேண்டும்' என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையங்களில் ஐ.ஆர்.சி.டி.சி சேவைகளை மீண்டும் தொடங்க ரயில்வே வாரியம் அனுமதித்துள்ளது, மேலும் இது கோவிட் நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றும் வகையில் வழங்கப்படும்.

இ-கேட்டரிங் கீழ், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (ஐ.ஆர்.சி.டி.சி) லிமிடெட் பட்டியலிட்டுள்ள ஏராளமான உணவு விநியோகிப்பாளர்களின் சேவைகள் உணவகங்களுக்கு வழங்கப்படும்.

தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையங்களில் உள்ள விற்பனை நிலையங்களிலிருந்தும் உணவு வழங்கல் சேவைகள் கிடைக்கின்றன.

இவ்வாறு ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x