பறவைக் காய்ச்சல் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: மத்திய அரசு அறிக்கையில் தகவல்

பறவைக் காய்ச்சல் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: மத்திய அரசு அறிக்கையில் தகவல்
Updated on
1 min read

இந்தியாவில் 11 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், திறம்பட செயல்பட்டு பிற பகுதிகளுக்கும் பரவாமல் கட்டுப்படுத் தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஜனவரி 15-ம் தேதி நிலவரப்படி மத்திய பிரதேசம், உத்தராகண்ட், டெல்லி, ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 11 மாநிலங்களின் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் காகம், கோழி, வாத்து உள்ளிட்ட பறவைகளுக்கு அவியன் இன்ஃபுளுயன்சா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இது பிற பகுதிகளுக்கும் பரவாமல் இருக்க திறம்பட செயல்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால்பறவைக் காய்ச்சல் கட்டுப்படுத் தப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த அவியன் இன்ஃபுளுயன்சா 70 டிகிரி வெப்பநிலையில் அழிந்து விடும் என்றும், நன்றாக சமைக்கப்பட்ட நிலையில் இறைச்சிகளை மக்கள் உட்கொள்ளலாம் என்றும் மீன்,கால்நடை மற்றும் பால் வளத்துறை அமைச்சகம் தெரிவித் துள்ளது.

எனவே பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லாத மாநிலங்களில் இருந்து பெறப்படும் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்க வேண்டாம் என மாநிலங்களுக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் கூறியுள்ளது.

மேலும் பறவைக் காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திமக்களின் பீதியைப் போக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட் டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in