பெண்களை பின்தொடரும் புதிய மொபைல் ‘ஆப்’: டெல்லி காவல்துறை சார்பில் விரைவில் அறிமுகம்

பெண்களை பின்தொடரும் புதிய மொபைல் ‘ஆப்’: டெல்லி காவல்துறை சார்பில் விரைவில் அறிமுகம்
Updated on
2 min read

டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அம்மாநில போலீஸாரை அதிக கவலைக்குள்ளாக்கி உள்ளது. இதனால் தங்களுக்கு வரும் அவப்பெயரை நீக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மொபைல்களில் புதிய ‘ஆப்’ களை அறிமுகப்படுத்தி வருகின்ற னர். இந்தவகையில், புதிதாக Track Me (என்னை தொடரு) என்ற பெயரில் புதிய ‘ஆப்’ அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இது தற்போது பயன்பாட்டில் இருக்கும் ‘ஹிம்மத்’ எனும் ‘ஆப்’ உடன் இணைந்து ஜி.பி.எஸ் கருவி மூலம் செயல்படும். டெல்லியில் பணியாற்றும் பெண்கள் மற்றும் பணி முடிந்து இரவு தாமதமாக வீடு திரும்பும் பெண்களுக்கு அதிகம் பயன்படும் வகையில் ‘ட்ராக் மீ’ அமைந்துள்ளது.

இதில் பயணிக்கும் பெண்களை ஜி.பி.எஸ் கருவி மூலம் பின் தொடர்வதற்கு, 3 வகையான கால அவகாசம் அளிக்கப்படுகிறது. முதல் அவகாசத்தில் குறிப்பிட்ட இடத்தில் இருந்து அப்பெண் வீடு செல்லும் வரை ‘டிராக் மீ’ பின்தொடரும். இவர் குறிப்பிட்ட நேரத்தில் வீடு சேர முடியவில்லை எனில், 2வது கால அவகாசத்தையும் பின்னர் 3-வது அவகாசத்தையும் தேர்வு செய்யவேண்டும். அவ்வாறு தேர்வு செய்யாவிடில் அவரை பின் தொடர்வதை போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் ஜிபிஎஸ் நிறுத்தி விடும்.

தற்போது சோதனை அடிப்படை யில் சில பகுதிகளில் இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இதற்கிடையில் அப்பெண் தனக்கு ஆபத்து நேர்ந்தால் ‘எஸ்.ஓ.எஸ்’ எனும் எச்சரிக்கை பொத்தானை அழுத்தி உதவி கேட்கலாம். இந்த எஸ்.ஓ.எஸ் ஹிம்மத் ‘ஆப்’ உடன் ஏற்கெனவே இணைந்து செயல்பட்டு வருகிறது.

இது குறித்து டெல்லி காவல் துறை சிறப்பு ஆணையர் சுந்தரி நந்தா கூறும்போது, “சோதனை அடிப் படையிலான ‘டிராக் மீ ஆப்’-ஐ காவல் துறையின் 8 அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதில் உள்ள குறைபாடுகளை களைந்து இன்னும் ஒரு மாதத்தில் இந்த ‘ஆப்’ அறிமுகம் செய்யப்படும். இந்த பின் தொடருதலை வேறு எவரும் தவறாகப் பயன்படுத்த முடியாதபடியும் அதிக கவனம் எடுத்து வருகிறோம்” என்றார்.

கடந்த ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட்ட ‘ஹிம்மத் ஆப்’ ஆண்ட்ராய்டு மொபைல்களில் பதி விறக்கம் செய்து பயன்படுத்தப் படுகிறது. இதனை பெறுவதற்கு, டெல்லி போலீஸாரின் இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதில் விண்ணப்பதாரர் பெயர், வீடு மற்றும் பணியிடத்தின் முகவரி, மொபைல் எண் ஆகிய விவரங்களு டன் எஸ்.ஓ.எஸ் எச்சரிக்கைக்காக தங்கள் பெற்றோர் அல்லது உறவி னர் இருவரின் மொபைல் எண் களும் தரவேண்டும். எஸ்.ஓ.எஸ் எச்சரிக்கை பொத்தான் அழுத்தப் பட்டவுடன் அப்பகுதி காவல் நிலையம், காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் உறவினர்களுக்கு எஸ்எம்எஸ் அலர்ட் சென்றுவிடும்.

மேலும் இந்த மொபைலின் 30 வினாடிகளுக்கான ஆடியோ மற்றும் வீடியோ அந்தப் பகுதியில் ரோந்து செல்லும் போலீஸாருக்கு சென்று விடும். இத்துடன் அப்பெண்ணின் நிலை குறித்து டெல்லி போலீஸாரின் முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களிலும் வெளியிடப்பட்டு விடும்.

இதுபோலவே ‘ஹிம்மத் ஆப்’ உடன் இணைந்து ‘ட்ராக் மீ ஆப்’ செயல்படும். இதுவரையில் எஸ்.ஓ.எஸ் எச்சரிக்கையால் அது கொடுக்கப்பட்ட இடத்தை ஜி.பி.எஸ் கருவி மூலம் கண்டறிந்து நட வடிக்கை எடுத்தனர். இனி அவர்கள் இடம் மாறினாலும் ‘ட்ராக் மீ’ உதவியுடன் ஜிபிஎஸ் பின்தொடரும் வசதி செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in