

பெங்களூரு அருகேயுள்ள நெல மங்களாவில் பைக் திருடர்களை பிடிக்க விரட்டி சென்ற போலீஸ் எஸ்.ஐ. கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். திருடர்களின் கொடூர தாக்குதலில் படுகாய மடைந்த 2 காவலர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர்.
பெங்களூருவை அடுத்துள்ள தொட்டப்பள்ளாப்புரா காவல் நிலையத்தில் ஜெகதீஷ் (32) சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றினார். இவர் நேற்று நெலமங்களா பகுதி யில் இரு சக்கர வாகனங்களை திருடும் ரகு மற்றும் கிருஷ்ணா ஆகி யோரை பிடிக்க 4 காவலர்களுடன் சென்றார். நெலமங்களாவை அடுத் துள்ள கிராஃபைட் தொழிற்சாலை அருகே பைக் திருடர்களை ஜெகதீஷ் தலைமையிலான போலீஸார் சுற்றி வளைத்தனர்.
அப்போது திருடர்கள் தங்களது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து போலீஸாரை சரமாரியாக குத்தினர். இதில் கிருஷ்ணா எஸ்.ஐ. ஜெகதீஷின் அடிவயிற்றில் கத்தியால் குத்தியதால், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதே போல ரகு காவலர்கள் வெங்கடேசமூர்த்தி, தர் ஆகிய காவலர்களை கடுமையாக தாக்கி யுள்ளனர். இதில் தருக்கு லேசான காயமும், வெங்கடேச மூர்த்திக்கு வயிற்றில் கத்தி குத்து விழுந்தது.
இதையடுத்து திருடர்கள் இருவரும் அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் தப்பியோடி உள்ளனர். திருடர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த 2 காவலர்களும் நெலமங்களா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் வெங்கடேசமூர்த்தி என்ற காவல ருக்கு அதிக ரத்தம் வெளியேறி யதால் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருவதாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைக் திருடர்கள் போலீஸாரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு மாநகராட்சி காவல் ஆணையர் மேக்ரிக், இணை ஆணை யர் ஹரிசேகரன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகளையும் அமைத் துள்ளனர்.