

காஷ்மீர் மாநிலம் டோடா மாவட்டத்தில் நடந்த என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் எஸ்.என்.ஆச்சார்யா கூறும்போது, "ஜம்மு-காஷ்மீர் காவல் துறையில் இருந்து விலகி தீவிரவாதிகளுடன் இணைந்த இரண்டு பேரை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.
நேற்றிரவு (புதன்கிழமை) தொடங்கிய இந்த என்கவுன்ட்டர் இன்று காலை 4.30 மணியளவிலேயே முடிவடைந்தது. மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. சுட்டு வீழ்த்தப்பட்ட இருவரும் குலாம் நபி மங்னூ மற்றும் ரியாஸ் அகமது என ஜம்மு பிரிவு போலீஸ் ஐ.ஜி. டானிஷ் ரானா உறுதி செய்துள்ளார்.
இவர்கள் இருவரும் போலீஸ் பணியை உதறிவிட்டு ஆயுதங்களுடன் தலைமறைவாகி தீவிரவாத கும்பலில் இணைந்தவர்கள்" என்றார்.