

நரேந்திர மோடி அரசு பதவியேற்று 30 நாட்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், தனக்கு 'தேனிலவு' காலக்கட்டம் இல்லை என்றும் 100 மணி நேரங்களுக்குள்ளாக தொடர் குற்றச்சாட்டுகள் வரத் தொடங்கி விட்டன என்றும் தெரிவித்தார்.
நாங்கள் எடுத்த ஒவ்வொரு முடிவும் தேச நலனைக் கருதியே ஆனாலும் சில சந்தர்ப்பங்கள் அரசால் ஒன்றும் செய்வதற்கில்லை என்ற நிலை உள்ளது, ஆனாலும் இந்த சர்ச்சைகள் நிலவுகின்றன. என்றார் மோடி.
ஆனால் இந்த சர்ச்சைகள் என்னவென்று அவர் குறிப்பிட்டுக் கூறவில்லை.
மேலும் அவர் தெரிவிக்கையில், “சிலருக்கு எங்கள் அரசின் நோக்கங்களும், நேர்மையும் நாட்டில் சில நல்ல மாற்றங்களைக் கொண்டுவருவதே என்பதை அறிவுறுத்துவது பெரிய சவாலாக இருக்கிறது. இவர்கள் அரசுக்கு உள்ளேயும் இருக்கின்றனர், வெளியேயும் இருக்கின்றனர், என்கிறார் நரேந்திர மோடி.
எது எப்படியிருந்தாலும் தனது தன்னம்பிக்கையும் உறுதிப்பாடும் பெரிய அளவுக்கு பெருகியுள்ளது என்று கூறியுள்ள மோடி, வலைப்பதிவு ஒன்றில் எழுதுகையில், “67 ஆண்டுகால முந்தைய ஆட்சி ஒரு மாத கால இந்த ஆட்சியுடன் ஒப்பு நோக்கத் தக்கதல்ல. எங்கள் அரசு முழுதுமே ஒவ்வொரு கணமும் நாட்டு மக்களின் நலனுக்காகவே பாடுபட்டு வருகிறது.
ஊடக வட்டாரங்களில் நண்பர்கள் சிலர் குறிப்பிடுவது போல் எல்லா புதிய அரசுக்குமே தேனிலவு காலக்கட்டம் என்ற ஒன்று உண்டு. முந்தைய அரசு இந்தத் தேனிலவு காலக்கட்டத்தை 100 நாட்கள் அல்லது அதைத் தாண்டியும் கழித்து வந்துள்ளனர்.
ஆனால் எனக்கு அது போன்ற சவுகரியம் எதுவும் இல்லை. 100 நாட்கள் ஏன் 100 மணி நேரத்திற்குள்ளாகவே தொடர் குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளது என்று எழுதியுள்ளார் பிரதமர் மோடி.
ஆனாலும் அமைச்சரவை சகாக்கள் மற்றும் முதலமைச்சர்களைச் சந்தித்ததிலிருந்து ”ஒரு சில பிரதேசங்களில் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் தேவை என்று நான் உணர்கிறேன்” என்று கூறியுள்ளர் மோடி.