அசாசுதீன் ஒவைசி ஒன்றும் காட்ஃபாதர் கிடையாது: மே.வங்க இமாம் கூட்டமைப்பு காட்டம்

அசாசுதீன் ஒவைசி : கோப்புப்படம்
அசாசுதீன் ஒவைசி : கோப்புப்படம்
Updated on
1 min read


அனைத்து இந்திய மஜ்லிஸ் இ இதிகாதுல் முஸ்லிமின்(ஏஐஎம்ஐஎம்) கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி ஒன்றும் காட் ஃபாதர் கிடையாது, மக்கள் யாரும் மதம்பார்த்து வாக்களிப்பதில்லை என்று மேற்கு வங்க இமாம் கூட்டமைப்பின் தலைவர் முகமது யாஹியா தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல் மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி காய்களை நகர்த்தி வருகிறது.

மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என பாஜக திட்டமி்ட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இதற்கிடையே காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் கூட்டணி அமைத்து களமாடுகின்றன. இதில் ஐதராபாத்தை அடிப்படையாகக் கொண்ட ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசியும் மேற்கு வங்கத்தில் தேர்தலில் போட்டியிடுவேன் என கூறியுள்ளார்.

மே.வங்கத்தில் உள்ள சிறுபான்மையினரிம் வாக்குகளைக் கவரும் முயற்சியில் ஒவைசி இறங்கியுள்ளார். பிஹாரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக ஒவைசி கட்சி போட்டியிட்டு 5 இடங்களில் வென்றது. அதேபோன்று மே. வங்கத்திலும் போட்டியிட்டு பல இடங்களை வெல்லும் முயற்சியில் ஒவைசி திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் மேற்கு வங்க இமாம் கூட்டமைப்பின் தலைவர் முகமது யாஹியா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி காட் ஃபாதர் கிடையாது. மேற்கு வங்கத்தில் நடக்கும் தேர்தல் மதத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல. ஒவையின் வருகை எந்தவிதத்திலும் மேற்கு வங்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஏனென்றால், மேற்கு வங்க மக்கள் வளர்ச்சியையும், மேம்பாட்டைத்தையும்தான் விரும்புகிறார்கள்.

ஒவைசி காட் ஃபாதர் இல்லை, அவரை மக்கள் பின்பற்ற வேண்டிய அவசியமும் இல்லை. பாஜகவும், ஏஐஎம்ஐஎம் கட்சியும் மதரீதியாக மக்களை பிளவுபடுத்தும் கட்சிகள். வங்கத்தை பாஜக பிளவுபடுத்த முயல்கிறது, அதே செயலைத் தான் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் ஒவைசியும் செய்கிறார்.

இந்தத் தேர்தல் ஒவ்வொருவருக்கானது, குறிப்பிட்ட மதத்தினருக்கானது அல்ல. அதாவது, இந்துக்கள் அதிகமானவர்கள் நிரம்பியிருக்கும் பகுதிக்கும் நடக்கும் தேர்தலும் அல்ல, முஸ்ஸிம்கள் இருக்கும் பகுதிக்கும் இல்லை.

அசாசுதீன் ஒவைசி ஏன் அனைத்து தரப்பு மக்கள் வசிக்கும் பகுதியில் போட்டியிடாமல் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் மட்டும் போட்டியிட விரும்புகிறார். ஆதலால், எந்தக் கட்சியினரும் மதத்தின் பெயரைக் கூடி மக்களிடம் வாக்குக் கேட்காதீர்கள்.” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in