

பிஹாரில் பாஜக அரசு அமையாது போனால் பாகிஸ்தானில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவார்கள். இதனை நீங்கள் விரும்புகிறீர்களா? என்று அமித் ஷா, கிழக்கு சம்பரான் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியுள்ளார்.
“சந்தர்பவசமாக பிஹாரில் பாஜக அரசு அமையவில்லை எனில் பாகிஸ்தானில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவார்கள்; இது நடக்க நீங்கள் விரும்புகிறீர்களா?” என்று கிழக்கு சம்பரானில் உள்ள ராக்ஸவுலில் பாஜக தலைவர் அமித் ஷா பேசினார்.
சிறப்பு அந்தஸ்து இல்லை
பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற முதல்வர் நிதிஷ் குமாரின் கோரிக்கையை நிராகரித்த அருண் ஜேட்லி மத்திய மாநில அரசுகளுக்கிடையே வரி ஆதாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் 14-வது நிதிக்கமிஷன் சலுகைக்குப் பிறகே சிறப்பு அந்தஸ்து கோருவது தேவையற்றது என்றார்.
“சிறப்பு அந்தஸ்து கோரும் காலம் முடிந்து விட்டது. மாநில-மத்திய அரசுகளுக்கிடையே வரி வருவாயை பகிர்ந்து கொள்ளும் நிலையான தீர்வுக்குப் பிறகு சிறப்பு அந்தஸ்து கோரிக்கை தேவையற்றது” என்று நேற்று அருண் ஜேட்லி தெரிவித்தார்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடி ஏற்கெனவே பிஹாருக்கு ரூ.1.25 லட்சம் கோடி நிதியுதவி அறிவித்துள்ளார் என்றார் ஜேட்லி.