இராக்கிலிருந்து மகள்கள் பத்திரமாக திரும்ப கேரள தம்பதி பிரார்த்தனை

இராக்கிலிருந்து மகள்கள் பத்திரமாக திரும்ப கேரள தம்பதி பிரார்த்தனை
Updated on
1 min read

இராக்கில் நர்ஸ் பணியில் உள்ள தமது 3 மகள்களும் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என கேரளத் தைச் சேர்ந்த பெற்றோர் பிரார்த் தனை செய்து வருகின்றனர்.

டோனா, சோனா, வீணா ஆகிய 3 நர்ஸ் பணியா ளர்களும் தாம் பணிபுரியும் மருத் துவமனைகளிலிருந்து தந்தை சி.சி.ஜோசப், தாயார் செலின் ஆகி யோரிடம் வெள்ளிக்கிழமை காலை தொலைபேசியில் பேசி யுள்ளனர். இதனால் இருவரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

கோட்டயம் மாவட்டம் யாட்டு மனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோசப். மூத்த மகள் டோனா அல் சமாவாவில் உள்ள மருத்துவ மனையில் ஒன்றரை ஆண்டுக்கு முன்பும், இரட்டைச் சகோதரி களான சோனா, வீணா இருவரும் திக்ரித்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 10 மாதத்துக்கு முன்பும் பணியில் சேர்ந்தனர்.

திக்ரித்தில் உள்ள மருத்துவ மனை தீவிரவாதிகளின் கட்டுப் பாட்டில் இருப்பதாகவும் அதன் நிர்வாகிகள் மாற்றப்பட்டு விட்டதா கவும் தமது மகள்கள் சொன்னதாக ஜோசப் கூறினார்.

சரியான வாய்ப்பு வரும்போது மருத்துவமனையிலிருந்து ஹெலி காப்டரில் 130 கிமீ தொலைவில் உள்ள விமான நிலையத்தில் சேர்ப் பதாக இந்திய தூதரக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர் எனவும் தமது மகள்கள் கூறியதாக ஜோசப் தெரிவித்தார்.

கடத்தல்காரர் பிடியில் மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத் தைச் சேர்ந்த 2 பேரும், அதே மாநிலத்தின் தெஹட்டா பகுதியைச் சேர்ந்த சோகன் சிக்தர், சாப்ரா பகுதியைச் சேர்ந்த திவாலிதிகாதரும் ஒரு குழுவினரால் பிணைக் கைதியாக சிறை வைக்கப்பட்டுள்ள தகவலை அவர்களது குடும்பத்தார் தெரிவித் தனர்.

இந்த நால்வரும் மோசுல் நகரில் தீவிரவாதிகள் கடத்திய 40 பேரில் சேர்ந்தவர்களா என்பது தெரியவில்லை என மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in