Last Updated : 11 Jan, 2021 03:18 PM

 

Published : 11 Jan 2021 03:18 PM
Last Updated : 11 Jan 2021 03:18 PM

மங்களூருவில் தீ விபத்தில் சிக்கிய 11 தமிழக மீனவர்கள்: துரித நடவடிக்கையால் மீட்பு

மங்களூருவில் படகில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்திலிருந்து 11 தமிழக மீனவர்களைக் கடலோரக் காவல் படையினர் துரித நடவடிக்கையால் பத்திரமாக மீட்டனர்.

மங்களூர் துறைமுகத்திற்கு மேற்கே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து கடலோரக் காவல்படை திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

''ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புதிய மங்களூர் துறைமுகத்திற்கு மேற்கே தமிழகத்தைச் சேர்ந்த மீன்பிடிப் படகு சென்றுகொண்டிருந்தது. 140 கடல் மைல் தொலைவில் நடைபெற்ற இச்சம்பவத்தில் மீனவர்கள் பயன்படுத்திவந்த சிலிண்டர் திடீரென வெடித்தது.

இதனால் திடீரென படகு தீப்பற்றி எரிந்தது. உடனடியாகப் படகில் இருந்தவர்கள் கடலோரக் காவல் படையினரைத் தொடர்பு கொண்டனர். தகவல் அறிந்த மும்பையைச் சேர்ந்த கடலோரக் காவல் படையின் இரண்டு கடல் ரோந்துக் கப்பல்கள்- சச்சேத் மற்றும் சுஜீத், மீனவர்களுக்கு உதவ விரைந்தன.

அதேநேரம் தகவல் கிடைத்ததும் கடலோரக் காவல்படை கடலில் ரோந்து சென்ற ஒரு டோர்னியர் விமானம் விபத்து ஏற்பட்ட படகை வேகமாகக் கண்டுபிடிக்க அந்தப் பகுதிக்குத் திருப்பிவிட்டது.

அதிகாரிகள் படகைக் கண்டுபிடித்தது மட்டுமல்லாமல், ஆபத்தை எதிர்கொள்ளும் மீனவர்களுடன் தொடர்பு கொள்ளவும், அவர்கள் மீது தைரியத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தினர்.

அதற்குள், ஐ.சி.ஜி.எஸ் சச்சேத் மற்றும் சுஜீத் ஆகிய ரோந்துக் கப்பல்களைச் சேர்ந்த படைவீரர்கள் அந்த இடத்தை அடைந்து பலத்த காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கினர்.

உடலின் மேற்பரப்பில் மட்டும் ஏற்பட்ட 36 சதவீதத் தீக்காயங்களுக்கு ஆளான ஒரு மீனவர் இங்குள்ள அரசு வென்லாக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மற்ற மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்கு மருத்துவ உதவி, உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சேதமடைந்த மீன்பிடிப் படகுகளை இழுத்துவர உரிமையாளர்கள் ஒரு படகை ஏற்பாடு செய்துவருகிறார்கள்''.

இவ்வாறு கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x