

இந்தியாவில் வேகமாகப் பரவிய கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் மத்திய, மாநில அரசு
களின் நடவடிக்கையால் குறைந்துவருகிறது. கரோனா தொற்று உள்ளதா என்று பரிசோதிக்க பயன்படுத்தப்படும் கருவிகள், பிபிஇ கிட், கையுறைகள், காலணிஉறைகள், முகக் கவசங்கள், ஊசிகள், சிரிஞ்சுகள், பிளாஸ்திரிகள், பாதுகாப்பு உடைகள் போன்ற கரோனா தொற்று சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் மனித திசுக்கள், ரத்தம் மற்றும் உடல் திரவத்தால் மாசுபட்ட பொருட்கள், படுக்கை போன்றவை கரோனா தொற்று கழிவுகளாகி விடுகின்றன.
கடந்த ஜூன் மாதம் முதல் 7 மாதங்களில் இந்தியா முழுவதும் 32,994 டன் கரோனா தொற்று மருத்துவக் கழிவுகள் உருவாகி உள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த 7 மாதங்களில் அக்டோபர் மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் அதிகபட்சமாக மொத்தம் 5,500 டன் கழிவுகள் உருவாகி உள்ளன. நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிகமாக 5,367 டன் ,கேரளாவில் 3,300 டன் கழிவுகள் உருவாகி உள்ளன.
குஜராத்தில் 3,086 டன், தமிழகத்தில் 2,806 டன், உ.பி.யில் 2,502 டன், டெல்லியில் 2,471 டன், மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகாவில் முறையே 2,095 மற்றும் 2,026 டன் கரோனா கழிவுகள் உருவாகி இருப்பதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மருத்துவக் கழிவுகள் 198 பொது உயிரியல் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரி விக்கப்பட்டுள்ளது.