Published : 18 Jun 2014 09:56 AM
Last Updated : 18 Jun 2014 09:56 AM

ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா மீது நில மோசடி புகார்: நடவடிக்கை கோரி பிரதமருக்கு சமூக ஆர்வலர் கடிதம்

மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா பெங்களூரில் 30 ஏக்கர் நிலத்தை தனது மனைவி பெயரில் சட்டத்திற்கு புறம்பாக வாங்கியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரி சமூக மாற்றத்திற்கான அமைப்பின் தலைவர் எஸ்.ஆர்.ஹிரேமத்,பிரதமர் நரேந்திர மோடிக்கு செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து ஹிரேமத்தை ‘தி இந்து' சார்பாக சந்தித்தபோது அவர் கூறியதாவது:

சதானந்த கவுடா, 2008-ம் ஆண்டு பெங்களூரில் உள்ள பாகலூரில் தனது மனைவி 'தாத்தி' பெயரில் சட்ட விதிகளுக்குப் புறம்பாக நிலம் வாங்கி வீடு கட்டியுள்ளார்.

பல கோடி மதிப்பிலான 30 ஏக்கர் மேய்ச்சல் நிலத்தை ரூ 4.7 லட்சத்திற்கு பதிவு செய்துள்ளார். கர்நாடக அரசின் நில உச்சவரம்பு சட்டத்தின்படி மேய்ச்சல் நிலத்தை வாங்க அனுமதியில்லை.

தனது பெயரில் பதிவு செய் யப்பட்டால் சிக்கல் ஏற்படும் என்ப தால் மனைவி பெயரில் மஹா தேவபுரா சார்பதிவாளர் அலுவல கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த நிலத்தில் 8 ஆயிரத்து 100 சதுர அடி பரப்பளவில் மிகப்பெரிய வீடும் கட்டியுள்ளார்.

பிரதமர் மோடி இவ்விவகாரம் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு வழிசெய்து சதானந்த கவுடா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு ஹிரேமத் தெரிவித்தார்.

‘தவறுக்கு வருந்தி, தார்மீகப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்' என வலியுறுத்தி சதானந்த கவுடாவுக்கும் கடிதம் எழுதியுள்ளார் ஹிரேமத்

சதானந்த கவுடா மீது நில மோசடி புகார் எழுவது புதிதான ஒன்று அல்ல.பெங்களூர் ஊரக மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம் பாக 48 ஏக்கர் நிலத்தை அபகரித் துள்ளார் என 2008-ம் ஆண்டு சி.ஆர்.நாகராஜ் என்பவர் கர்நாடக லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கில் இன்னும் சில மாதங்களில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1975-ம் ஆண்டு நிலமற்ற ஏழைகளுக்கு வீடு கட்டிக்கொடுக்க பெங்களூர் அருகே அருகே 68 ஏக்கர் நிலம் ஒதுக்கியது.அங்கு கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் சதானந்த கவுடா விதிமுறைகளை மீறி தனது உறவினர்களுக்கு 68 வீடுகள் ஒதுக்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பெங்களூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x