அமெரிக்காவிலிருந்து பெங்களூருவுக்கு பெண்களே இயக்கும் ஏர் இந்தியா விமானம்; சான் பிரான்சிஸ்கோவிலிருந்து இரவு புறப்படுகிறது

சான் பிரான்சிஸ்கோ-பெங்களூரு போக்குவரத்தின் முதல் நாளான இன்று விமானத்தை இயக்க உள்ள பெண் விமானி.
சான் பிரான்சிஸ்கோ-பெங்களூரு போக்குவரத்தின் முதல் நாளான இன்று விமானத்தை இயக்க உள்ள பெண் விமானி.
Updated on
1 min read

சான் பிரான்சிஸ்கோ-பெங்களூரு விமானப் போக்குவரத்தின் முதல் நாளான இன்று பெண் விமானிகளே விமானத்தை இயக்கப்போவதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா விமானம் சனிக்கிழமை வட துருவத்தின் மீது பறக்கும், அட்லாண்டிக் பாதையில் பெங்களூரு சென்றடையும் என்று ஏர் இந்தியாவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சான் பிரான்சிஸ்கோ-பெங்களூருக்கான விமானப் போக்குவரத்து இன்று முதல் தொடங்குகிறது. சான் பிரான்சிஸ்கோவிற்கும், பெங்களூருக்கும் இடையிலான வான்வழி தூரம் உலகின் மிக நீளமான ஒன்றாகும்.

ஏர் இந்தியாவின் ஏஐ176 விமானம் இன்று சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு (உள்ளூர் நேரம்) அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து புறப்பட்டு, திங்கட்கிழமை அதிகாலை 3.45 மணிக்கு (உள்ளூர் நேரம்) கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்.



இதுகுறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

"ஏர் இந்தியாவின் பெண் சக்தி உலகம் முழுவதும் உயரமாகப் பறக்கிறது. பெங்களூரு-சான் பிரான்சிஸ்கோ இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க தொடக்க விமானத்தை கேப்டன் சோயா அகர்வால், கேப்டன் பாபகரி தன்மாய், கேப்டன் அகன்ஷா சோனாவேர் மற்றும் கேப்டன் சிவானி மன்ஹாஸ் ஆகியோரைக் கொண்ட அனைத்துப் பெண்கள் காக்பிட் குழுவினரும் இயக்குவார்கள்."

இவ்வாறு ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in