Published : 09 Jan 2021 03:10 AM
Last Updated : 09 Jan 2021 03:10 AM

பறவைக் காய்ச்சல் எதிரொலி: கோழி, வாத்து கறி சாப்பிடலாமா?- உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தல்

புதுடெல்லி

கேரளா, இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியாணா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எச்5 என்1 எனப்படும் இந்த வைரஸ், கோழி மற்றும் வாத்துகளை தாக்கும். பறவைக் காய்ச்சல் காரணமாக லட்சக்கணக்கான பறவைகள் இறந்துள்ளன. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. டெல்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் நிலைமைகளை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

பறவைக் காய்ச்சலால் கோழி, வாத்துகள் விற்பனை சரிந்துள்ளது. அவற்றை சாப்பிட மக்கள் தயங்கி வருகின்றனர். இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப் பில் கூறியிருப்பதாவது:

கோழிக்குஞ்சு, கோழி, வாத்து போன்றவற்றை சாப்பிடும் முன்புஅவற்றை தூய்மையான முறையில் முறையாக தயாரித்து நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும். வெப்பத்தால் இந்த வைரஸ் அழியும் என்பதால், உணவை குறைந்தது 70 டிகிரி செல்சியஸில் வேக வைப்பதன் மூலம் உணவில் உள்ள கிருமி அழியும். பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பறவை அல்லது இறந்த பறவைகளை கவனமாக கையாள வேண்டும். பறவைக் காய்ச்சலை தடுக்க இவற்றை பின்பற்றுவது முக்கியமானது.

இவ்வாறு உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x