

‘குடிமக்கள் இணைய பக்கம்’ மூலம் காவல் துறை சார்ந்த பல்வேறு சேவைகளை வீட்டிலிருந்தே பெறும் திட்டத்தை ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த சேவையை தொடங்கி வைத்து முதல்வர் நவீன் பட்நாயக் கூறும்போது, “மக்கள் இனி காவல் நிலையத்துக்கோ, உயர் அதிகாரிகளைச் சந்திக்கவோ நேரில் செல்லத் தேவையில்லை. ‘சிட்டிசன் போர்டல்’ இணைய பக்கத்துக்குள் நுழைந்து, புகார் களை ஆன் லைன் மூலம் காவல் நிலையத்துக்குச் சமர்ப்பிக்கலாம். தங்களின் புகார் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்தும் அறிந்து கொள்ளலாம். இந்த வசதி குற்றவாளிகள், பெரும் குற்றங்களை துப்பு துலக்குவதற்கு சிறந்த உதவியாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
www.citizenportal-op.gov என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொண்டு இவ்வசதியைப் பெறலாம். இதன் மூலம், காவல் நிலையத்திலிருந்து நடத்தைச் சான்றிதழ் பெறவும், பேரணி, ஊர்வலம், பொதுக்கூட் டம், போராட்டங்கள், வேலைநிறுத் தங்கள் மேற்கொள்ளுதல் உள்ளிட்டவற்றுக்கு ஆன் லைன் மூலமே அனுமதி பெறவும் முடியும்.