Published : 18 Oct 2015 09:17 AM
Last Updated : 18 Oct 2015 09:17 AM

கேரளாவின் அமைதி பள்ளத்தாக்கில் துப்பாக்கிச் சண்டை: மாவோயிஸ்ட் - போலீஸ் மோதல் - 4 மாநில எல்லைகளில் உஷார் நிலை

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அமைதி பள்ளத்தாக்கு பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும், கேரள அதிரடிப்படை போலீஸாருக்கும் இடையே நேற்று துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், மாவோயிஸ்ட்கள் இருவர் காயமடைந்து தப்பியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தமிழக, கேரள, கர்நாடக, ஆந்திர மாநில எல்லைகளில் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

கோவையில் இருந்து கேரள மாநிலம் மன்னார்காடு செல்லும் சாலையில் சுமார் 70 கி.மீ. தொலைவில் உள்ளது அமைதி பள்ளத்தாக்கு. இதன் நடுப்பகுதியாக விளங்குவது பழங்குடியினர் கிராமமான கடுகு மண்ணு. இங்கு மாவோயிஸ்ட்கள் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கேரள அதிரடிப் படையினர் ஒரு பிரிவாகவும், அகளி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு பிரிவு போலீஸாரும் நேற்று காலை முக்காலி வழியாகவும், அகளி வழியாகவும் சென்று முகாமிட்டனர். கடுகு மண்ணுவில் ஒரு பெண் உட்பட 5 மாவோயிஸ்ட்கள் தங்கியி ருந்ததைக் கண்டுபிடித்தனர்.

இதையறிந்த மாவோயிஸ்ட் கள், போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப் படுகிறது. பதிலடியாக கேரள அதிரடிப்படை போலீஸார் 7 ரவுண்டு சுட்டதாகவும், அதில் 2 மாவோயிஸ்ட்கள் குண்டு காய மடைந்து தப்பியோடியதாகவும் போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

முதலில் மாவோயிஸ்ட்கள் தான் துப்பாக்கியால் சுட்டதாகவும், அதிரடிப்படை போலீஸார் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்தார்.

இந்நிலையில், தேடுதல் வேட்டைக்கு கூடுதல் போலீஸார் அனுப்பப்பட்டுள்ளதாக பாலக்காடு மாவட்ட ஆட்சியர் மேரிகுட்டி தெரிவித்தார். இந்த மோதலில் போலீஸார் யாரும் காயமடையவில்லை என்பதை அவர் உறுதி செய்தார்.

இந்நிலையில், காயமடைந் ததாக கூறப்படும் 2 மாவோயிஸ்ட் களை சிகிச்சைக்காக கொண்டு வரக்கூடும் என்பதால் தமிழக எல்லையான மாங்கரை, முள்ளி, ஆனைகட்டி போன்ற இடங் களில் உள்ள சோதனைச் சாவடி களில் கண்காணிப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. கர்நாடக, ஆந்திர எல்லைகளிலும் அந்தந்த மாநில போலீஸார் உஷார்படுத்தப்பட் டுள்ளனர்.

தமிழக எல்லையில் பாதுகாப்பு

இதுகுறித்து தமிழக அதிரடிப் படை எஸ்பி கருப்பசாமியிடம் கேட்ட போது, ‘‘கேரள மாநிலம் அகளி போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடன் போலீஸார் துப்பாக்கி சண்டை நடத்தியதாக எங்களுக்கும் தகவல் கிடைத் துள்ளது. இதையடுத்து தமிழக எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்திய போலீஸார் கண் காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x