Published : 08 Jan 2021 04:08 PM
Last Updated : 08 Jan 2021 04:08 PM

கோவிட் சமயத்தில் 6.47 கோடிப் பேருக்கு உதவி: நேரு யுவகேந்திரா சாதனை

கோவிட் சமயத்தில் 6.47 கோடிப் பேருக்கு உதவி செய்து நேரு யுவகேந்திரா மற்றும் என்.எஸ்.எஸ் தன்னார்வலர்களின் சாதனை புரிந்துள்ளனர்.

கோவிட் தொடர்பான பணிகளில் 6.47 பேருக்கு உதவிக்கரம் நீட்டி நேரு யுவகேந்திரா, நாட்டு நலப் பணித்திட்ட தன்னார்வலர்கள் சாதனை படைத்துள்ளனர்.

கடந்த 2020-ஆம் ஆண்டு இளைஞர் விவகாரங்கள் துறை மேற்கொண்ட முக்கியப் பணிகள்:

• மக்கள் இயக்கம்: கோவிட்- 19-க்கு எதிரான போராட்டத்தில் சரியான நடத்தை முறையைப் பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

• கோவிட் காலத்தில் முதியோருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவிகள் வழங்கப்பட்டன.

• 2.19 கோடி பேரை ஆரோக்கிய சேது செயலியை தரவிறக்கம் செய்யுமாறு தன்னார்வலர்கள் ஊக்குவித்தனர்.

• கோவிட் வாரியர்ஸ்.கவ்.இன் (covidwarriors.gov.in) என்ற தளத்தில் 61.35 இலட்சம் தன்னார்வலர்கள் பதிவு செய்தனர்.

• வீட்டிலிருந்து முகக் கவசங்களைத் தயாரிப்பது குறித்து 1.46 கோடி மக்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

• கோவிட்-19-லிருந்து 22.78 இலட்சம் முதியோரைப் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.

• இந்த காலகட்டத்தில் 7.39 இலட்சம் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான உதவிகள் அளிக்கப்பட்டன.

• கோவிட்-19 பெருந்தொற்றின்போது 19 இலட்சம் தன்னார்வலர்கள் சேர்க்கப்பட்டனர்.

• ஒருங்கிணைந்த அரசு இணையதளப் பயிற்சி/ சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்/உலக சுகாதார நிறுவனம்/ தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் குறித்த பயிற்சிகள் 62 இலட்சத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்டன.

• ஊட்டச்சத்துத் திட்டத்தின் கீழ் நேரு யுவகேந்திராக்கள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ஊட்டச்சத்து சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டன.

• நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, நேரு யுவகேந்திரா தன்னார்வலர்கள் மற்றும் உன்னத இந்தியா திட்டம் மூலம் தேசிய வலைத்தள கருத்தரங்கம் வாயிலாக தேசிய கல்விக் கொள்கை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

• தேசிய கல்வி கொள்கை 2020-இன் முக்கிய அம்சங்கள் குறித்து மொத்தம் 3.90 கோடி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

• ராஷ்ட்ரீய ஸ்வச்தா கேந்திரா துவங்கப்பட்டதுடன் காண்டகி முக்த் பாரத் என்ற முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.

• ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டம் 2020-2021, காணொலி வாயிலாக (வலைதளக் கருத்தரங்கம்) நடைபெற்றது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x