Last Updated : 08 Jan, 2021 02:45 PM

 

Published : 08 Jan 2021 02:45 PM
Last Updated : 08 Jan 2021 02:45 PM

கல்வி, சமூக சேவைகளில் முன்னோடியாகத் திகழ்ந்தவர்: நேதாஜியின் மருமகள் சித்ரா கோஷ் மறைவுக்கு மோடி இரங்கல்

பிரதமர் மோடி | கோப்புப் படம்

புதுடெல்லி

கல்வி, சமூக சேவைகளில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் சித்ரா கோஷ் என்று அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மருமகளும், பிரபல கல்வியாளருமான சித்ரா கோஷ் தனது 90-வது வயதில் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார்.

கடுமையான மாரடைப்பு காரணமாக, சித்ரா கோஷ் வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் காலமானதாக கோஷின் மருமகனும், பாஜக தலைவருமான சந்திர குமார் போஸ் தெரிவித்தார்.

கொல்கத்தாவின் லேடி பிராபோர்ன் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர் சித்ரா கோஷ். அக்கல்லூரியின் அரசியல் அறிவியல் துறையின் முன்னாள் தலைவராக நீண்டகாலம் பொறுப்பேற்றிருந்தார். அவரது இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை பிற்பகலில் நடைபெற்றன.

சித்ரா கோஷ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி கூறியுள்ளதாவது:

"பேராசிரியர் சித்ரா கோஷ் கல்வியாளர்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர். அவர் பல்வேறு சமூக சேவைகளில் தனது பங்களிப்புகளை வழங்கியுள்ளார். அவருடன் கலந்துரையாடிய அனுபவங்களை நினைத்துப் பார்க்கிறேன்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான கோப்புகளின் வகைப்படுத்தல் உட்பட பலவற்றையும் நாங்கள் விவாதித்துள்ளோம். அதன் காரணமாக அவருடன் ஏற்பட்ட தொடர்பு எனக்கு நினைவிருக்கிறது. அவர் மறைவால் வருத்தப்படுகிறேன். அவரது குடும்பத்தினருக்கு இரங்கல். ஓம் சாந்தி”.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x