Last Updated : 08 Jan, 2021 12:38 PM

 

Published : 08 Jan 2021 12:38 PM
Last Updated : 08 Jan 2021 12:38 PM

ஒடிசா முதல்வரை கொல்ல சதித்திட்டம்: கடிதம் வந்ததை அடுத்து விசாரணை; பாதுகாப்புக்கு உத்தரவு

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கைச் சுற்றி சதித்திட்டம் பின்னப்பட்டுள்ளதாக பெயரிடப்படாத கடிதம் ஒன்று வந்துள்ளது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில், அதிநவீன துப்பாக்கிகளால் ஆயுதம் ஏந்திய ஒப்பந்தக் கொலையாளிகள் எப்போது வேண்டுமானாலும் முதல்வரைத் தாக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

மாநில அரசின் அதிகாரிகள் வெளியிட்டுள்ள பெயரிடப்படாத கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

"சட்டவிரோதமாகச் செயல்பட்டுவரும் சில ஒப்பந்தக் கொலையாளிகள் .. உங்களைக் கொல்ல முயற்சித்து வருகிறார்கள் என்பதை நான் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த ஒப்பந்தக் கொலையாளிகள் தொழில்முறை குற்றவாளிகள் என்பதால் அவர்கள் ஏ.கே .47 மற்றும் அரை தானியங்கி ரக கைத்துப்பாக்கிகள் போன்ற சமீபத்திய ஆயுதங்களை வைத்துள்ளனர்.

நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம் என்று நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன், எனவே தயவுசெய்து எச்சரிக்கையாக இருங்கள் ஆயுதங்கள் ஏற்கனவே மாநிலத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. சதித்திட்டத்தின் சூத்திரதாரி நாக்பூரில் வசிக்கிறார்.''

இவ்வாறு பெயரிடப்படாத கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் பாதுகாப்பு பலப்படுத்த உத்தரவு

ஜனவரி 5 ம் தேதி கடிதம் கிடைத்ததைத் தொடர்ந்து, உள்துறை சிறப்புச் செயலாளர் சந்தோஷ் பாலா, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மாநில காவல்துறை தலைவர், உளவுத்துறை இயக்குநர் ஜெனரல் மற்றும் காவல் ஆணையர் புவனேஸ்வர் ஆகியோரிடம் இது குறித்து விசாரணை செய்யுமாறும் முதலமைச்சரின் இல்லம், தலைமைச் செயலகம் மற்றும் முதல்வரின பல்வேறு இடங்களுக்கான பயணத்தின் போது வழித்தடங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்று பாலா உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x