இங்கிலாந்து விமானங்களுக்கு ஜனவரி 31 வரை தடை:  கேஜ்ரிவால் வேண்டுகோள்

அர்விந்த் கேஜ்ரிவால் | கோப்புப் படம்.
அர்விந்த் கேஜ்ரிவால் | கோப்புப் படம்.
Updated on
1 min read

இங்கிலாந்து விமானங்களுக்கு ஜனவரி 31 வரை தடை நீட்டிக்கப்பட வேண்டும் என கேஜ்ரிவால் மத்திய அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இங்கிலாந்தில் உருமாறிய கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்ததால் டிசம்பர் 23 முதல் ஜனவரி 7 வரை இரு நாடுகளையும் இணைக்கும் அனைத்து பயணிகள் விமானங்களையும் இந்தியா நிறுத்தியது.

கடந்த சனிக்கிழமை விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், இந்தியாவில் இருந்து இங்கிலாந்து செல்லும் விமானங்கள் ஜனவரி 6 முதல் மீண்டும் தொடங்கும் என்றும், அந்த நாட்டிலிருந்து இங்குள்ள சேவைகள் ஜனவரி 8 முதல் மீண்டும் தொடங்கும் என்றும் கூறியிருந்தார்.

சுகாதார அமைச்சகத்தினால் வழங்கப்பட்ட நிலையான இயக்க நடைமுறைகளின்படி, ஜனவரி 8 முதல் ஜனவரி 30 வரை இங்கிலாந்தில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் வருகையில் தங்கள் சொந்த செலவில் கோவிட் 19 சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். மேலும், இங்கிலாந்தில் இருந்து வரும் ஒவ்வொரு பயணிகளும் பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் செய்யப்பட்ட சோதனையிலிருந்து தனது கோவிட் 19 இல்லை என்பதை உறுதி செய்யும் அறிக்கையை கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கோவிட் 19 நிலையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு இங்கிலாந்துக்கான விமானப் போக்குவரத்துத் தடையை தொடர்ந்து நீட்டிக்க வேண்டும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்ட பலரும் கோரி வருகின்றனர்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

“தடையை நீக்கி இங்கிலாந்து விமானங்களைத் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இங்கிலாந்தில் தற்போது கோவிட் நிலைமை மிகவும் கடுமையாக உள்ளது.

இந்நிலையைக் கருத்தில் கொண்டு இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான விமானங்களுக்கான தடையை ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டுமென மத்திய அரசிடம் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in