

கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் 51 சதவீதத்தினர் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய ஐந்து மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
கோவிட் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனையைப் படைத்துள்ளது. கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்தது
உலகிலேயே மிக அதிகமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் ஒரு கோடியைத் தாண்டி (1,00,16,859), 96.36 சதவீதமாக பதிவாகியுள்ளது. இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் குணமடைந்தவர்களின் வீதம் 90 சதவீதத்திற்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. இந்தியாவை விட அதிக பாதிப்புகளை சந்திக்கும் நாடுகளில் குணமடைந்தோரின் வீதம் குறைவாகவே உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 19,587 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சை பெறுவோர் மற்றும் குணமடைந்தோர் ஆகியோருக்கான இடைவெளி தொடர்ந்து உயர்ந்து தற்போது 97,88,776 ஆக உள்ளது. சிகிச்சை பெறுவோரை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 44 மடங்கு உயர்வு.
இந்தியாவில் தற்போது 2,28,083 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பில் இது வெறும் 2.19 சதவீதமாகும். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் 51 சதவீதத்தினர் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய ஐந்து மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
பரிசோதனைகளின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருவதை அடுத்து, இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை சரிந்து வருகிறது. நாளொன்றின் பாதிப்பு தொடர்ந்து 3 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.
புதிதாக குணமடைந்தவர்களில் 79.08 சதவீதத்தினர் 10 மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் மட்டுமே சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக கேரளாவில் 5,110 பேரும், மகாராஷ்டிராவில் 2,570 பேரும் குணமடைந்துள்ளனர்.
83.88 சதவீத புதிய தொற்றுக்கள் 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் மட்டுமே பதிவாகியுள்ளன. கேரளாவில் 6,394 பேரும், அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 4,382 பேரும், சத்தீஸ்கரில் 1,050 பேரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 222 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 67.57 சதவீதத்தினர் 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களை மட்டுமே சேர்ந்தவர்கள். மகாராஷ்டிராவில் 66 பேரும், கேரளாவில் 25 பேரும், மேற்கு வங்காளத்தில் 22 பேரும் உயிரிழந்துள்ளனர்.