இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்யும் வியட்நாம்

இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்யும் வியட்நாம்
Updated on
1 min read

கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்யாமல் இருந்து வந்த வியட்நாம், உள்நாட்டில் அரிசி விலை அதிகரித்ததைத் தொடர்ந்து அதைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது.

அதேசமயம் ஆசிய நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளையும் அது அதிகரித்துள்ளது. இதனால்வியட்நாம் மற்றும் தாய்லாந்தில் இருந்து வழக்கமாக அரிசி இறக்குமதி செய்யும் நாடுகள், இந்தியாவில் இருந்து அரிசியைவாங்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 70 ஆயிரம் டன் அரிசியை, டன் 310 டாலர் விலையில் போக்குவரத்துக் கட்டணம் ஏதுமின்றி அனுப்ப ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

வியட்நாமுக்கு முதல் முறையாக அரிசி ஏற்றுமதி செய்வதாக அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் பி.வி.கிருஷ்ணா ராவ் தெரிவித்தார். இந்தியாவில் அரிசி விலை குறைவாக இருப்பதால் பிற நாடுகள் இந்தியாவிடம் இருந்து வாங்க முன்வரும். அதிக அளவில் ஏற்றுமதி ஆர்டர் கிடைக்கும் போது அதன் மூலம் லாபம் ஈட்டலாம் என்றும் அவர் கூறினார்.

பிலிப்பைன்ஸில் இருந்து அரிசி வரத்து குறைந்ததன் காரணமாக வியட்நாமின் அரிசி ஏற்றுமதி பாதிக்கப்பட்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் விலை அதிகரித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in