Published : 07 Jan 2021 03:14 AM
Last Updated : 07 Jan 2021 03:14 AM

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் ஊழியரிடம் நலம் விசாரித்து அனைவரின் மனம் கவர்ந்த ரத்தன் டாடா

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட தனது நிறுவனத்தின் முன்னாள் ஊழியரை நேரில் சென்று நலம் விசாரித்தார் தொழிலதிபர் ரத்தன் டாடா.

ஊடகங்களுக்கு எந்த தகவலும்தெரிவிக்காமல், முன்னறிவிப்பின்றி தனது நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான யோகேஷ் தேசாயின் வீட்டுக்குச் சென்று நேரில் நலம் விசாரித்தார் ரத்தன் டாடா. 83 வயதான ரத்தன் டாடா மும்பையில் இருந்து புனேவுக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.

அவரது மனிதாபிமான செயலை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் யோகேஷ் தேசாய். யோகேஷ் தேசாயின் குடும்பத்தினருடன் அவர் எடுத்துக் கொண்ட ஒரே ஒரு புகைப்படம் மட்டும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. ரத்தன் டாடாவின் மனிதாபிமானம் பலராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் யோகேஷ் தேசாய். அவரை நலம் விசாரித்ததன் மூலம் தொழிலதிபர்களுக்கு நடமாடும் முன்னுதாரணமாக அவர் விளங்குவதாக பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

டாடா குழும நிறுவனங்களின் தலைவராக (எமிரேடஸ்) விளங்குகிறார் ரத்தன் டாடா. 2011-ம் ஆண்டிலேயே இக்குழும சொத்து மதிப்பு 10,000 கோடி டாலரைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x