Last Updated : 09 Oct, 2015 04:40 PM

 

Published : 09 Oct 2015 04:40 PM
Last Updated : 09 Oct 2015 04:40 PM

எழுத்தாளர் சசி தேஷ்பாண்டே விலகல்: மவுனம் கலைத்த சாகித்ய அகாடமி விளக்கம்

எழுத்தாளர் சசி பாண்டே சாகித்ய அகாடமி குழுவிலிருந்து விலகினார். நாட்டில் பெருகி வரும் சகிப்புத் தன்மையற்ற போககுக்கு அகாடமி மவுனம் சாதிப்பதை எதிர்த்து இவர் தனது பொறுப்பை உதறினார்.

எதிர்ப்புக் கருத்துகளை வெளியிடும் எழுத்தாளர்கள், பகுத்தறிவை பரப்பும் செய்ல்பாட்டாளர்கள் கொலை செய்யப்படுகின்றனர், பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமைகள் குழிதோண்டி புதைக்கப்பட்டு வருவதை எதிர்த்து எழுத்தாளர்கள் பலர் தங்களின் சாகித்ய அகாடமி விருதை திரும்பி அளித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் சாகித்ய அகாடமி அசாத்திய மவுனம் காப்பது ஏன் என்று அகாடமி தலைவர் விஸ்வநாத் பிரசாத் திவாரியிடம் கேட்கப்பட்டது.

அவரது நேர்காணலிலிருந்து...

அகாடமி இதுவரை ஏன் பேசவில்லை? 3 முக்கிய படைப்பாளிகள் தங்கள் விருதை திரும்ப கொடுத்து விட்டனர், சசி தேஷ்பாண்டே விலகியுள்ளார், ஏன் மவுனம்?

நான் யாருக்காக பணியாற்றுகிறேன் என்பதில் செயற்குழுவின் வழிகாட்டுதல் இன்றி நான் எதுவும் பேசவோ, செய்யவோ முடியாது. எனவே செயற்குழு என்னை பேசு என்று கூறினால் நான் பேசுவேன். அவர்கள் என்னை அமைதியாக இருக்குமாறு கூறினால் நான் அமைதி காப்பேன் அவ்வளவே.

ஆனால் நீங்கள் அகாடமியின் தலைவர், கொலை செய்யப்பட்ட எழுத்தாளர்கள் சார்பாக நீங்கள் ஏன் நிலைப்பாடு எடுக்கவில்லை என்று உங்கள் மீது குற்றச்சாட்டு எழுகிறது. இது ஏன்?

கடந்த காலத்திலும் அகாடமி இத்தகைய விவகாரங்களில் கருத்து கூறியதாகத் தெரியவில்லை. அவசரநிலை காலக்கட்டம், 1984 கலவரங்கள், 2002 குஜராத் கலவரங்கள், ஆகிய காலக்கட்டத்தில் கூட அகாடமி மவுனமே காத்தது. அது ஒரு போதும் பேசியதில்லை, நான் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இங்கு இருக்கிறேன். அதனால் நான் ஏதாவது கூறினால் செயற்குழு என்னை கேள்வி கேட்கும்.

சமீபத்திய நிகழ்வுகளை அடுத்து அவசரக் கூட்டத்தை நீங்கள் கூட்ட வேண்டிய அவசியம் ஏற்படவில்லையா?

டிசம்பர் 22-ம் தேதி செயற்குழு கூட்டம் கூடுகிறது. இப்போது நான் அவசரக்கூட்டத்தை கூட்டினால் ரூ.15 லட்சம் திடீர் செலவு ஏற்படும். அதாவது நாடு முழுதும் எழுத்தாளர்களை ஒன்று திரட்ட செலவாகும். நயன்தாரா சேகல், அல்லது அசோக் வாஜ்பேயி பேசவுமில்லை, ஆலோசிக்கவுமில்லை. அவர்கள் ஆலோசித்திருந்தால் மட்டுமே நான் மாற்று எதிர்ப்பை அவர்கள் பரிசீலிக்க கேட்டுக் கொண்டிருப்பேன்.

அகாடமி பரிந்துரை செய்திருந்தால் அந்த மாற்று எதிர்ப்பு வழிமுறைகள் என்ன?

தர்ணா அல்லது உண்ணாவிரத போராட்டத்துக்கு அனைவரும் தயாராகியிருக்கலாம். மகாத்மா காந்தி நமக்கு பல்வேறு விதமான எதிர்ப்பு முறைகளைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். நாங்கள் ஒன்று சேர்ந்திருக்கலாம்.

ஆனால் ஒன்று சேர உங்களை தடுத்தது எது? நீங்கள்தானே அகாடமியின் தலைவர்?

அகாடமியின் சம்பிரதாயங்களை நான் பின்பற்ற வேண்டும். ஒரு எழுத்தாளராக அவர்களது உணர்வுகளை மதிக்கிறேன். நான் அவர்கள் சார்பாகவே இருக்கிறேன். அதே போல் தேஷ்பாண்டே என்னை ஆலோசித்திருந்தால் நான் அவரை விலக வேண்டாம், காத்திருக்கவும் என்று கேட்டுக் கொண்டிருப்பேன்.

நயன்தாரா சேகல் விருதை திருப்பி அளித்த சூழலில், விருது பெற்ற எழுத்தாளர்கள் வருவாயும் பெற்றனர், நல்லெண்ணத்தையும் பெற்றனர் என்று நீங்கள் கூறினீர்களே... இதற்கு என்ன அர்த்தம்?

சாகித்ய அகாடமி விருது பெற்ற படைப்பாளிகளின் ஒவ்வொரு படைப்பும் 24 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தற்போது விருதைத் திருப்பி கொடுத்தால், வாசகர்களிடம் நாங்கள் என்ன விளக்கம் கூற முடியும்? இப்போது இந்த இரண்டக நிலையைத்தான் எதிர்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் அகாடமியின் மவுனத்துக்கான காரணத்தை விளக்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x