உருமாறிய கரோனா வைரஸ்: இந்தியாவில் இதுவரை 38 பேருக்கு பாதிப்பு

உருமாறிய கரோனா வைரஸ்: இந்தியாவில் இதுவரை 38 பேருக்கு பாதிப்பு
Updated on
1 min read

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய வகை கரோனா தொற்றால் இதுவரை 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பத்து பேர் பெங்களூரு நிமான்ஸ் மருத்துவமனையிலும், மூன்று பேர் ஹைதராபாத் சிசிஎம்பியிலும், ஐந்து நபர்கள் புனேவில் உள்ள என் ஐ வியிலும், 11 பேர் டெல்லி ஐஜிஐபியிலும், எட்டு நபர்கள் புதுடெல்லி என்சிடிசியிலும், ஒருவர் கொல்கத்தா என்சிபிஜியிலும் சிகிச்சை பெறுகின்றனர்.

என்சிபி ஸ், இன்ஸ்டெம், பெங்களூரு, சிடிஎஃப்டி ஹைதராபாத், ஐஎல்எஸ் புவனேஸ்வர் மற்றும் என் சிசிஎஸ் புனே ஆகியவற்றில் இதுவரை இங்கிலாந்து கரோனா வகை பாதிப்பு கண்டறியப்படவில்லை.

ஜீன் வகைப்படுத்தலுக்காக உறுதி செய்யப்பட்டுள்ள மாதிரிகள் பத்து இன்சாகோஜ் ஆய்வகங்களில் பரிசோதிக்கப் படுகின்றன. இவை என் ஐபிஎம்ஜி கொல்கத்தா, ஐ எல் எஸ் புவனேஸ்வர், என்ஐவி புனே, என் சி சி எஸ் புனே, சிசிஎம்பி ஹைதராபாத், சிடிஎஃப்டி ஹைதராபாத், இன்ஸ்டெம் பெங்களூரு, நிமான்ஸ் பெங்களூரு, ஐஜிஐபி டெல்லி மற்றும் என்சிடிசி டெல்லி ஆகும்.

தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அனைத்து நபர்களும் மருத்துவ மையங்களில் உள்ள தனி அறைகளில் தொடர்புடைய மாநில அரசுகளால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களின் நெருங்கிய தொடர்புகளும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுடன் பயணம் செய்தவர்கள், குடும்ப தொடர்புகள் மற்றும் இதர நபர்களை கண்டறிவதற்காக விரிவான தொடர்பு கண்டறிதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இதர மாதிரிகளின் வரிசைப்படுத்தலும் நடைபெற்று வருகிறது.

நிலைமை கூர்ந்து கண்காணிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு, தடுப்பு, பரிசோதனை மற்றும் மாதிரிகளை இன்சாகோஜ் ஆய்வகங்களுக்கு அனுப்புவதற்காக மாநிலங்களுக்குத் தொடர்ந்து அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in