Published : 03 Jan 2021 03:29 PM
Last Updated : 03 Jan 2021 03:29 PM

அனதர் ரவுண்ட்; சிறப்புக் காட்சியோடு தொடங்குகிறது இந்திய சர்வதேச திரைப்பட விழா

தாமஸ் விண்டர்பெர்கின் ‘அனதர் ரவுண்ட்’-இன் சிறப்புக் காட்சியோடு 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கவிருக்கிறது

தாமஸ் விண்டர்பெர்கின் ‘அனதர் ரவுண்ட்’-இன் இந்திய சிறப்புக் காட்சியோடு 2021 ஜனவரி 16 அன்று 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கவிருக்கிறது. சிறந்த நடிகருக்கான கேன்ஸ் விருதை வென்ற மேட்ஸ் மிக்கெல்சன் நடித்துள்ள இத்திரைப்படம், இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ள நட்சத்திரங்கள் நிறைந்த திரைப்படங்களில் ஒன்றாகும்.

டென்மார்க் சார்பில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டுள்ள திரைப்படம் ‘அனதர் ரவுண்ட்’ என்பது குறிப்பிடத்தக்கது. ‘மெஹ்ருன்னிசா’ என்னும் திரைப்படத்தின் சர்வதேச சிறப்புக் காட்சியும் இந்த திருவிழாவில் நடைபெறும். சஞ்சய் குமார் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில், ஃபருக் ஜஃபார் நடித்துள்ளர். பெண்மணி ஒருவரின் வாழ்நாள் கனவு குறித்து இப்படம் விவரிக்கிறது.

கியோஷி குரூசவாவின் ‘வைஃப் ஆஃப் அ ஸ்பை’ திரைப்படத்தின் இந்திய சிறப்புக் காட்சியோடு 2020 ஜனவரி 24 அன்று 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நிறைவு பெறும். இந்த ஜப்பானிய திரைப்படம் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான வெள்ளி சிங்கம் விருதை வென்றுள்ளது.

51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, 2020-க்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய திரைப்படங்களின் பட்டியலில் தமிழ் திரைப்படங்களான அசுரன் மற்றும் தேன் இடம்பெற்றுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

183 இந்திய திரைப்படங்களில் இருந்து 23 திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் பல்வேறு மொழிகளிலிருந்து இந்த திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x