

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் 5 இடங்களில் அமைக்கப்பட்ட மையங்களில் நேற்று கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. இதில் முதல் தடுப்பூசியை அரசு மருத்துவமனையின் தலைமை செவிலியர் சுஜாதா போட்டுக்கொண்டார். திலக் நகரில் உள்ள ஆரம்ப சுகாதர மையத்தில் நேற்று கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. அப்போது இந்த மையத்திற்கு நேரில் சென்ற மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், மருத்துவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "ஆண்டின் தொடக்கத்தில் கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. தெலங்கானாவில் 4 கட்டங்களாக 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்க உள்ளோம்" என்றார்.