

பிஹாரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது. பாஜகவுடன் கூட்டணி அமைத்த ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ் குமார் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார். இந்நிலையில் தேர்தலில் போட்டியிட்டு பதவியில் இருப்போரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அதில் முதல்வர் நிதிஷ் குமாருக்கு டெல்லியில் ரூ 40 லட்சம் மதிப்பிலான ஒரு வீடு சொந்தமாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் சில கறவை மாடுகளும் நிதிஷுக்கு சொந்தமாக உள்ளன. ஆனால் அவருடைய மகன் நிஷாந்த், நிதிஷைவிட பெரிய பணக்காரராக உள்ளார்
அவரிடம் வைப்புத் தொகை, முதலீடுகள் என ரூ 1.25 கோடி இருக்கிறதாம். இதுதவிர நிஷாந்துக்கு விவசாய நிலங்கள், குடியிருப்புகள் என ரூ.1.48 கோடிக்கு சொத்து உள்ளது.
துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத்திடம் இன்னோவா மற்றும்ஸ்கார்பியோ கார்கள் உள்ளன. அவரது மனைவியிடம் கட்டிகாரில்ரூ 30 லட்சம் மதிப்பிலான நிலம்உள்ளது. மற்றொரு துணை முதல்வரான ரேணு தேவியிடம் துப்பாக்கியும் ரிவால்வரும் உள்ளது. மேலும் 500 கிராம்தங்க நகைகள் உள்ளன. அதுபோல் கால்நடை மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் முகேஷ் சாஹ்னி மற்றும் அவரது மனைவியிடம் ரூ.18 கோடி மதிப்பிலான சொத்து மும்பையில் உள்ளது.
வருவாய் துறை அமைச்சர் ராம்சுரத் ராயிடம் ரூ.17 கோடிக்கும் மேலான சொத்துகள் உள்ளன. தொழிலாளர் நலன் துறை அமைச்சர் ஜிவேஷ் குமாருக்கு ரூ.3 கோடிக்கும் மேலான சொத்து இருப்பது தெரியவந்துள்ளது.