தமிழகத்தில் முதல்கட்டமாக 1.60 கோடி பேருக்கு தடுப்பூசி; 3 கோடி முன்கள பணியாளர்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்

டெல்லியில் உள்ள குரு தேஜ் பகதூர் (ஜிடிபி) மருத்துவமனையில் நேற்று நடைபெற்ற கரோனா தடுப்பூசி ஒத்திகையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆய்வு செய்தார்.படம்: பிடிஐ
டெல்லியில் உள்ள குரு தேஜ் பகதூர் (ஜிடிபி) மருத்துவமனையில் நேற்று நடைபெற்ற கரோனா தடுப்பூசி ஒத்திகையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆய்வு செய்தார்.படம்: பிடிஐ
Updated on
2 min read

நாடு முழுவதும் 3 கோடி முன்கள பணி யாளர்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி ஒத்திகை நேற்று தொடங்கியது. டெல்லி யில் குரு தேஜ் பகதூர் (ஜிடிபி) மருத் துவமனையில் தடுப்பூசி ஒத்திகையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனா தடுப்பூசி தொடர்பாக வதந்தி களை நம்ப வேண்டாம். எந்தெந்த தடுப்பூசிகளை அனுமதிப்பது என்பது குறித்து இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) முடிவு செய்யும். நாடு முழுவதும் 116 மாவட்டங்களில் 259 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. இதற்காக சுமார் 96,000 சுகாதார ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தடுப்பூசி போடும்போது எழும் பிரச்சினைகளைக் கண்டறிய ஒத்திகை நடத்தப் படுகிறது. இதற்கேற்ப வியூகங்கள் வகுக்கப்படும்.

அடுத்த 6 மாதங்களில் 30 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.இதில் முதல் கட்டமாக ஒரு கோடி சுகாதாரஊழியர்கள், 2 கோடி முன்கள பணியாளர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும். வயது முதுமை, நோயாளிகள் என முன்னுரிமை அடிப்படையில் இதர 27 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

4 தடுப்பூசிகள் தயார்

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று கூறியதாவது: அமெரிக்காவில் பைசர் தடுப் பூசியை போட அனுமதி வழங்கப் பட்டுள்ளது. பிரிட்டனில் பைசர் மற்றும் ஆக்ஸ்போர்டு கரோனா தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இந்தியாவில் ஆக்ஸ்போர்டு கரோனா தடுப்பூசிக்கு நிபுணர் குழு ஏற்கெனவே அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் 3 தடுப்பூசிகளுக்கு அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டு மொத்தமாக ஒரேநேரத்தில் 4 தடுப் பூசிகள் சந்தையில் கிடைக்கும். உலகளாவிய அளவில் 4 தடுப்பூசிகளை அறிமுகம் செய்யும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனிடையே ஆக்ஸ்போர்டு,பாரத் பயோடெக், பைசர் ஆகிய 3 நிறுவனங்கள் தங்களது கரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி கோரி இந்திய மருந்து தரக் கட் டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப் பித்துள்ளன.

இவை குறித்து சிடிஎஸ்சிஓ நிபுணர் குழு நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தி கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப் பட்டது.

இதைத் தொடர்ந்து டெல்லி யில் நேற்று மீண்டும் கூடிய இக்குழு பாரத் பயோ டெக் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப் பூசியை அவசர நிலைக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. சிடிஎஸ்சிஓ அனுமதி அளித்தவுடன் இந்த இரு தடுப்பூசிகளும் பயன்பாட்டுக்கு வரும்.

தமிழகத்தில் 47,200 மையங்கள்

கோவை இஎஸ்ஐ மருத்துவ மனையில் நேற்று நடைபெற்ற, தடுப்பூசி முகாம் ஒத்திகையை பார்வையிட்ட சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறும்போது, "முதல்கட்டமாக 1.60 கோடி பேருக்கு தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக 47,200 மையங்கள் அமைக்கப்பட்டு 21,170 சுகாதாரப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறும் போது, "மக்கள் அனை வருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்த முதல் மாநிலம் தமிழகம்தான்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in