

காற்று மாசைக் கட்டுப்படுத்த செயல்மிகு நடவடிக்கைகளை எடுக்குமாறு தேசிய தலைநகரப் பகுதி மாநிலங்களுக்கு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
டெல்லி - தேசிய தலைநகரப் பகுதிகளில் காற்றின் தரம் மற்றும் வானிலை நிலவரத்தை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
காற்று மாசைக் கட்டுப்படுத்த ஊக்கமிகு நடவடிக்கைகளை எடுக்குமாறு தேசியத் தலைநகரப் பகுதி மாநிலங்களின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
மாசுபடுத்தும் நடவடிக்கைகள் குறித்து சமீர் செயலியின் மூலம் தகவல் அளிக்குமாறு பொதுமக்களை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. காற்றின் தரம் வரும் நாட்களில் மிகவும் மோசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.