Published : 01 Jan 2021 08:40 AM
Last Updated : 01 Jan 2021 08:40 AM

பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ. 75 லட்சம்: இந்திய செயற்கை மூட்டுக் கருவிகள் உற்பத்தி நிறுவனம் வழங்கியது

புதுடெல்லி

இந்திய செயற்கை மூட்டுக் கருவிகள் உற்பத்தி நிறுவனம், பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ. 75 லட்சம் வழங்கியது.

கோவிட் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் இந்திய செயற்கை மூட்டுக்கருவிகள் உற்பத்தி நிறுவனம், நிறுவனத்தின் சமுதாயப் பொறுப்புக்கான நிதியாக (சிஎஸ்ஆர்) ரூ.75 இலட்சத்தை அவசர சூழ்நிலைக்கான பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண நிதிக்கு (PM CARES நிதி) வழங்கியுள்ளது.

இந்த நிதித் தொகை, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தாவர் சந்த் கெலாட்டிடம் வழங்கப்பட்டது. இணை அமைச்சர் கிருஷ்ணன் பால் குர்ஜர், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் செயலாளர் சகுந்தலா டி காம்லின், இந்திய செயற்கை மூட்டுக்கருவிகள் உற்பத்தி நிறுவனத்தின் தலைவரும், மேலாண் இயக்குநருமான . டி. ஆர். சரீன் ஆகியோர் அப்போது உடன் இருந்தனர்.

நிறுவனத்தின் இந்த பங்களிப்பைப் பாராட்டிய அமைச்சர் கெலாட், மாற்றுத் திறனாளிக்களுக்கு உதவி உபகரணங்களைத் தயாரித்து அதன் மூலம் அவர்களைப் பயனடையச் செய்வதே ஆலிம்கோ என்ற இந்திய செயற்கை மூட்டுக் கருவிகள் உற்பத்தி நிறுவனத்தின் குறிக்கோளாகும் என்று கூறினார்.

கடந்த நிதி ஆண்டிலும் இந்த நிறுவனம் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உதவும் வகையில் ரூ. 55.18 இலட்சத்தை வழங்கியது. மொத்தமாக ரூ. 1.30 கோடி மதிப்பிலான நிதி உதவியை இந்திய செயற்கை மூட்டுக்கருவிகள் உற்பத்தி நிறுவனம், அவசர சூழ்நிலைக்கான பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண நிதிக்கு அளித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x