Published : 01 Jan 2021 07:52 AM
Last Updated : 01 Jan 2021 07:52 AM

பாகிஸ்தானில் இந்து கோயில் இடிப்பு: 26 பேரை கைது செய்தது போலீஸ்

புதுடெல்லி

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்துன்கவா மாகாணம் கரக் மாவட்டம் தெர்ரி என்ற கிராமத்தில் பழமையான கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயிலை புதுப்பிக்க உள்ளூரைச் சேர்ந்த இந்துக்கள் அதிகாரிகளிடம் அனுமதி பெற்றனர். இதை அறிந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் மதத் தலைவர் ஒருவர் தலைமையில் ஜாமியாத் உலாமா - இ-இஸ்லாம் என்ற அடிப்படைவாத கட்சியின் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் கோயிலை இடித்து கொளுத்தினர். இதில் கோயில் முற்றிலும் சேதமடைந்தது. இதுதொடர்பாக மனித உரிமை அமைப்புகளும் பாகிஸ்தானில் சிறுபான்மையாக உள்ள இந்துக்களும் கடும் எதிர்ப்பு தெர

கோயில் இடித்து தீ வைக்கப்பட்டது தொடர்பாக 26 பேரை கைது செய்துள்ளதாகவும் சம்பந்தப்பட்டவர்களை தொடர்ந்து தேடி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். மத விவகாரங்களுக்கான பாகிஸ்தான் அமைச்சர் நூருல் ஹக் காத்ரி தனது ட்விட்டர் பதிவில், ‘‘கோயில் மீதான தாக்குதல் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கான சதி. சிறுபான்மையினரி்ன் வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்துவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. சிறுபான்மையாக உள்ளவர்களின் மத சுதந்திரத்தை பாதுகாப்பது மத அடிப்படையிலும் தார்மீக, அரசியல் சாசன அடிப்படையிலும் நமது தேசிய கடமை’’ என்று கூறியுள்ளார். முஸ்லிம் மதத் தலைவர்கள் கவுன்சிலின் பரிந்துரையின் பேரில் இஸ்லாமாபாத்தில் இந்துக்கள் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்று பாகிஸ்தான் அரசு சமீபத்தில் அனுமதித்த நிலையில், இச்சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x