Last Updated : 31 Dec, 2020 03:18 AM

 

Published : 31 Dec 2020 03:18 AM
Last Updated : 31 Dec 2020 03:18 AM

கர்நாடக கிராம பஞ்சாயத்து தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் அதிக இடங்களில் முன்னிலை

பெங்களூரு

கர்நாடகாவில் உள்ள 226 தாலுகாக்களில் உள்ள 72,616 கிராம பஞ்சாயத்து வார்டுகளுக்கு கடந்த‌டிசம்பர் 22 மற்றும் 27-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் 2 லட்சத்து 22 ஆயிரத்து 343 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், 8,074 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தேர்தலில் பதிவான 81 சதவீத வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

நேற்று மாலை 7 மணி நிலவரப்படி பாஜக 4,228 இடங்களிலும், காங்கிரஸ் 2,265 இடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும் 10 ஆயிரத்து 955 இடங்களில் பாஜக ஆதரவு வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றனர். காங்கிரஸ் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் 8,567 இடங்களிலும், மஜத ஆதரவு பெற்றவேட்பாளர்கள் 3,829 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றனர். பகுஜன் சமாஜ், இடதுசாரிகள் உள்ளிட்ட இதர கட்சியினரும், சுயேச்சைகளும் 3,260 இடங்களில் முன்னிலை வகிக்கிறார்கள். மீதமுள்ள இடங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து முதல்வர் எடியூரப்பா கூறும்போது, "மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக தலைமையில் நல்லாட்சி வழங்குவதால் கிராம மக்களும் பாஜகவை ஆதரித்துள்ளனர். எங்கள் கட்சிக்கும் எனது ஆட்சிக்கும் இந்தவெற்றியின் மூலம் நற்சான்றிதழ் வழங்கிய வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x