ஓட்டுநர் அருகில் அமரும் பயணி இருக்கைக்கும் காற்றுப்பை கட்டாயம்: கருத்துக்கேட்பு

ஓட்டுநர் அருகில் அமரும் பயணி இருக்கைக்கும் காற்றுப்பை கட்டாயம்: கருத்துக்கேட்பு

Published on

ஓட்டுlருக்கு அருகில் அமரும் பயணி இருக்கைக்கும் காற்றுப்பை அமைப்பதை கட்டாயமாக்குவது பற்றி பொதுமக்கள் கருத்துக் கோரப்பட்டுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஓட்டுனருக்கு அருகில் முன் இருக்கையில் அமரும் பயணிக்கும் காற்றுப்பை வசதி அளிப்பதை கட்டாயமாக்க சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

புதிய ரக வாகனங்களுக்கு 2021 ஏப்ரல் 1-ஆம் தேதி முதலும், தற்போது உள்ள ரகங்களுக்கு 2021 ஜூன் 1-ஆம் தேதி முதலும் இந்த திட்டத்தை செயல்படுத்த கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை டிசம்பர் 28-ஆம் தேதி, அமைச்சகம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

அறிவிப்பு வெளியான 30 நாட்களில் இதுதொடர்பான பங்குதாரர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களையும் பின்னூட்டங்களையும் comments-morth@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in