Last Updated : 30 Dec, 2020 03:17 AM

 

Published : 30 Dec 2020 03:17 AM
Last Updated : 30 Dec 2020 03:17 AM

கர்நாடக மேலவை துணை தலைவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: அரசியல் கொலை என முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றச்சாட்டு

கர்நாடக சட்ட மேலவை துணைத் தலைவர் தர்மேகவுடா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் பிரதமர் தேவகவுடா வின் மஜத கட்சியைச் சேர்ந்தவர் தர்மே கவுடா (65). கடந்த 2019-ல் காங்கிரஸ் ஆதரவோடு குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்றதும் தர்மே கவுடாவுக்கு சட்ட மேலவைதுணைத் தலைவர் பதவி வழங்கினார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சக்கராயபட்டணா வில் உள்ள தன் இல்லத்தில் இருந்து கடூரில் உள்ள பண்ணை வீட்டுக்கு கிளம்பினார். அப்போது பாதுகாப்பு அதிகாரிகளை தன்னுடன் வர வேண்டாம் என கூறிவிட்டு, தனியாக காரில் சென்றார். நள்ளிரவு ஆன பிறகும் வீட்டுக்கு திரும்பாததால் குடும்பத்தினர் அச்சமடைந்தனர். இதையடுத்து, போலீஸாரின் உதவியுடன் அவரை தேடியபோது, செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் கடூர் அருகேயுள்ள தண்டவாளத்தில் தர்மேகவுடா உடல் சிதறிய நிலையில் பிணமாக கிடந்தார். இதையடுத்து, போலீஸார் தர்மேகவுடாவின் உடலை கைப்பற்றி ஷிமோகா மருத்துவமனைக்கு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தர்மேகவுடாவின் சகோதரரும், சட்டமேலவை உறுப்பினருமான போஜேகவுடா கூறுகையில், ‘‘கடந்த 11-ம் தேதி சட்டமேலவைத் தலைவர் பிரதாப் சந்திரஷெட்டிக்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தியபோது காங்கிரஸ் உறுப்பினர்கள் இருக்கையில் அமர்ந்திருந்த என் சகோதரர் தர்மேகவுடாவை கீழே பிடித்து தள்ளினர். இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். அதில் இருந்து மீண்டு வர முடியாமல் இந்த முடிவை எடுத்துள்ளார்''என்றார்.

முன்னாள் முதல்வர் குமாரசாமி, ‘‘தர்மேகவுடாவின் மறைவு மஜதவுக்கு மாபெரும் இழப்பாகும். அவரது மரணத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சட்டமேலவையில் நடந்த சம்பவமே இந்த மரணத்துக்கு காரணம். இது தற்கொலை அல்ல.அப்பட்டமான அரசியல் கொலை.இந்த கொலைக்கு யார் காரணமோ, அவர்களை நிச்சயம் தண்டிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

இதனிடையே கடூர் போலீஸார்தர்மேகவுடாவின் மரணம் குறித்துவழக்குப்பதிவு செய்து விசார ணையை தொடங்கியுள்ளனர். அவரது உடல் அருகே கிடந்த 2 பக்க கடிதத்தை கைப்பற்றி அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து வருகின்றனர். தர்மே கவுடா தற்கொலை குறித்து விசாரித்து வருவதாக போலீஸார் கூறியுள்ளனர்.

தர்மேகவுடாவின் மறைவுக்குமுன்னாள் பிரதமர் தேவகவுடா, முதல்வர் எடியூரப்பா, முன்னாள்முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித் துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x