நுரையீரல் அழற்சிக்கு முதல் தடுப்பு மருந்து அறிமுகம்

நுரையீரல் அழற்சிக்கு முதல் தடுப்பு மருந்து அறிமுகம்
Updated on
1 min read

நுரையீரல் அழற்சிக்கான நாட்டின் முதல் தடுப்பு மருந்தை ஹர்ஷ் வர்தன் அறிமுகப்படுத்தினார்

நுரையீரல் அழற்சிக்கான நாட்டின் முதல் தடுப்பு மருந்தை (Pneumococcal Conjugate Vaccine) மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர். ஹர்ஷ் வர்தன் அறிமுகப்படுத்தினார்.

‘நிமோசில்’ (Pneumosil) எனப்படும் இந்த மருந்தை பில் அண்டு மெலிந்தா கேட்ஸ் ஃபவுண்டேஷனுடன் இணைந்து சீரம் இன்ஸ்ட்டிட்டியூட் ஆஃப் இந்தியா பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ளது.

அதிகp பயன்பாடு மற்றும் இந்தியp பொருளாதாரத்திற்கு அதன் பங்களிப்பைp பொருத்தவரையில் உலகின் மிகப்பெரிய தடுப்பு மருந்து உற்பத்தியாளராக சீரம் இன்ஸ்ட்டிட்டியூட் ஆஃப் இந்தியா பிரைவேட் லிமிடெட் விளங்குவதாகக் கூறிய அமைச்சர், 170 நாடுகளில் அந்நிறுவனத்தின் தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுவதாகக் கூறினார்.

உலகில் இருக்கும் மூன்றில் ஒரு குழந்தைக்கு சீரம் இன்ஸ்ட்டிட்டியூட் ஆஃப் இந்தியாவின் தடுப்பு மருந்துகள் வழங்கப்படுகின்றன என்று டாக்டர். ஹர்ஷ் வர்தன் மேலும் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா இலட்சியத்தைச் சார்ந்து, கோவிட்-19 பெருந்தொற்று காரணத்தால் அமல்படுத்த பொதுமுடக்கத்தின் போது, நுரையீரல் அழற்சிக்கான தடுப்பு மருந்திற்கான உரிமத்தை சீரம் இன்ஸ்ட்டிட்டியூட் ஆஃப் இந்தியா பெற்றதை அமைச்சர் நினைவு கூர்ந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in