புதிய வேளாண் சட்டங்களால் நிறுவனங்களுக்கே பலன்: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு

புதிய வேளாண் சட்டங்களால் நிறுவனங்களுக்கே பலன்: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு
Updated on
1 min read

புதிய வேளாண் சட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளன என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரிபஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் டெல்லி எல்லைப் பகுதிகளில் முகாமிட்டு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று முன்தினம் டெல்லியின் சிங்குஎல்லைப் பகுதிக்கு சென்று விவசாயிகளுடன் கலந்துரையாடி னார். அங்கு விவசாயிகள் மத்தியில் அவர் பேசியதாவது:

புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று மத்திய அரசு இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. அந்த சட்டங்களால் விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று மட்டுமே கூறி வருகிறது. புதிய வேளாண் சட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளன.

எதிர்க்கட்சிகள் விவசாயிகளை தவறாக வழிநடத்தி வருவதாக மத்திய அரசு குற்றம் சாட்டிவருகிறது. நான் மத்திய அமைச்சர்களிடம் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் நேருக்கு நேர் விவாதத்தில் பங்கேற்க நீங்கள் தயாரா? அப்போது என்னென்ன தீமைகள் ஏற்படும் என்பதை விவசாயிகள் விளக்குவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in