

நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ள நிலையில், குடியரசுத்தலைவரை ட்விட்டரில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டி உள்ளது.
குடியரசுத்தலைவர் அலு வலகம் சார்பில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் ‘@RashtrapatiBhvn’ என்ற பெயரில் ட்விட்டரில் கணக்கு தொடங்கப்பட்டது. இதை உலகம் முழுவதும் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை நேற்று முன்தினம் 10 லட்சத்தை எட்டியது.
இதில் இந்த மாதத்தில் மட்டும் 47 ஆயிரம் பேர் பின்தொடரத் தொடங்கி உள்ளனர்.
இதன்மூலம் மற்ற அரசு துறைகளை குடியரசுத் தலைவர் அலுவலகம் வேகமாக இந்த எண்ணிக்கையை எட்டி உள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்ட பத்திரிகை தகவல் அமைப்பின் (பிஐபி) ட்விட்டர் கணக்கை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 6.46 லட்சமாக உள்ளது.
இதுபோல 2012 நவம்பரில் தொடங்கப்பட்ட செய்தி ஒலிபரப் புத் துறை அமைச்சகத்தின் கணக்கை 4.16 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.