

மியான்மர் எல்லைக்குள் இந்திய ராணுவம் புகுந்து தீவிரவாத முகாம்களை அழித்ததுபோல பாகிஸ்தான் நாட்டுக்குள் புகுந்து தீவிரவாதிகளை அழிக்காதது ஏன் என்று மத்திய அரசிடம் சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவில் நேற்று வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ள தாவது:
காஷ்மீரில் நான்கு பாதுகாப்புப் படை வீரர்களை பாகிஸ்தான் தீவிர வாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. சுதந்திரமான வீரர்கள் என்ற அந்தஸ்தை தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் கொடுத்துள்ளது. அந்த தீவிரவாதிகளால் இந்தியா பேரிழப்பை சந்திக்கிறது.
அண்மையில் மியான்மருக்குள் இந்திய ராணுவம் புகுந்து தீவிரவாத முகாம்களை அழித்தது. அதே மன துணிவுடன் பாகிஸ்தான் ஆக்கிர மிப்பு காஷ்மீருக்குள் நமது படை களை அனுப்பி தீவிரவாதிகளை வேட்டையாட வேண்டும்.
இதற்கான முடிவை எடுக்க வேண்டிய பொறுப்பு அரசியல் தலைமையிடம் இருப்பதாக இந்திய விமானப் படை தளபதி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக் குள் புகுந்து தாக்குதல் நடத்தும் துணிவு நம்மிடம் உள்ளது. ஆனால் அரசியல் துணிவு இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
தீவிரவாதிகளால் கொல்லப் படும் இந்திய வீரர்களின் சவப் பெட்டிகளுக்கு மலர்வைத்து அஞ்சலி செலுத்துவது துணிவு அல்ல. இந்திய வீரர்களால் கொல்லப்படும் பாகிஸ்தான் தீவிர வாதிகளுக்கு அந்த நாட்டு அரசு தியாகி அந்தஸ்து வழங்கி அவர் களுக்கு நினைவுச் சின்னம்கூட அமைக்கிறது. இதை கண்டித்தே ஆகவேண்டும்.
நாம் பாகிஸ்தான் படை வீரர் களுக்கு எதிராகப் போரிடவில்லை. அந்த நாடு பயிற்சி கொடுத்து அனுப்பி வைக்கும் தீவிரவாதி களை எதிர்த்தே போரிடுகிறோம். ஆனால் நாம் அதிக விலை கொடுக்கிறோம்.
நமது பாதுகாப்புப்படை வீரர்கள் திறமைமிக்கவர்கள். ஆனால் தீவிர வாதிகளை எதிர்த்துப் போரிடுவ தால் நிறைய இழப்பு ஏற்படுகிறது.
குருதாஸ்பூர், உதம்பூர், தற் போது குப்வாரா என தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களுக்கு பாகிஸ் தானுக்கு தக்க பாடத்தை கற்பித் தாக வேண்டும். இல்லையெனில் நாம்தான் பாடம் கற்கவேண்டிவரும்.இவ்வாறு சிவசேனா தெரிவித் துள்ளது.
கடந்த ஜூன் மாதம் மணிப்பூர் மாநில எல்லையில் வடகிழக்கு மாநில தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். தாக்கு தலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் மியான்மர் எல்லைப் பகுதியில் ஊடுருவி பதுங்கி கொண்டனர்.
அதே மாதத்தில் மியான்மரின் எல்லைப் பகுதியில் ஹெலிகாப்ட ரில் தரையிறங்கிய இந்திய ராணுவ அதிரடிப் படை வீரர்கள் 70 பேர், சுமார் 100-க்கும் மேற்பட்ட தீவிர வாதிகளை சுட்டுக் கொன்று அங்கு செயல்பட்ட முகாம்களை அழித்தனர்.