

உபியில் மேலும் ஒரு பாஜக பிரமுகர் மீது துப்பாக்கிச் சூடு நடை பெற்றுள்ளது. அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள் ளார். பாஜக முக்கியப் பிரமுகர்க ளின் மீது கடந்த ஒரு வாரத்தில் நடை பெற்ற மூன்றாவது தாக்குதலாகும் இது.
டெல்லியிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் இருப்பது புலந்த்ஷெஹர் மாவட்டம். இதன் சிறுநகரமான குலாவத்தியில் கடை வைத்து வியாபாரம் செய்கிறார் புனித் சிங்கால் (27). பாஜக நகர கட்சித் தலைவரான சிங்காலின் கடைக்குள் புதன்கிழமை மதியம் சுமார் 2.30 மணிக்கு திடீரென புகுந்த இரு கொள்ளையர்கள், அவரிடம் இருந்த பணப்பையை கொள்ளை அடிக்க முயன்றுள்ளனர். அதைத் தர மறுத்ததால், சிங்காலை தங்க ளிடமிருந்த கள்ளத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடி விட்டனர். குண்டு காயங்களுடன் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் மீரட்டில் உள்ள தனியார் மருத்துவமனை யில் சிங்கால் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இதுகுறித்து, ‘தி இந்து'விடம் குலாவத்தி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சைலேந்தர்சிங் ராத்தோர் கூறுகையில், ‘‘சம்பவம் நடந்த மார்க்கெட் பகுதியில் சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டிருப்பதால் அதன் பதிவுகளை ஆராய்ந்து வருகிறோம்’’ என்றார்.
ஒரு வாரம் முன்பாக கிரேட்டர் நொய்டாவின் அருகில் இருக்கும் தாத்ரியின் பாஜக தலைவர் விஜய் பண்டிட்டும் ஒரு கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பிறகு 2 நாட்களுக்கு முன்பு முசாபர்நகர் மாவட்டத்தின் மீராபூர் நகர பாஜக தலைவர் ஓம்வீர் சிங்கும் கொலை செய்யப்பட்டார். விஜய் பண் டிட்டை கொலை செய்ததாக சந் தேகப்படும் நான்கு கிரிமினல்களை தாத்ரி போலீஸார் கைது செய் துள்ளனர்.
இதுகுறித்து உபி காவல்துறை யின் சட்டம்-ஒழுங்கு கூடுதல் இயக்குநர் ஜெனரல் தேவேந்தர் சிங் சவுகான் கூறுகையில், ‘‘கடந்த வருடம் விஜய் பண்டிட்டின் உற வினர் ரவீந்தர் சர்மா ஒரு கோஷ்டி தகராறில் கொலை செய்யப்பட் டார். இவரைக் கொன்றதாக அருண் மற்றும் அவரது சகாக்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜாமீனில் வந்த அவர்கள் சர்மாவின் குடும்பத்தினரை சந்தித்து, தங்கள் மீதான வழக்கை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தினர். இதை ஏற்க மறுத்த விஜய் பண்டிட், அருணால் ஏவி விடப் பட்ட கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டுள்ளார்’’ என்றார்.
ஆனால், இதுதொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல என தாத்ரிவாசிகள் தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத்தினர். சமாஜ்வாதி கட்சியின் தலைவர் நரேந்தர் பாட்டிதான் உண்மை குற்றவாளி எனவும் அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இதற்கிடையே, நிலத்தகராறில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் ஓம்வீர் சிங், சம்பவம் நடந்தபோது தன்னை தாக்கியவர்கள் மீது துப் பாக்கிச் சூடு நடத்தி இருக்கிறார். இதனால், குண்டு பட்டு அருகி லுள்ள மீரட் மருத்துவமனையில் ரகசியமாக சிகிச்சை பெற்றுவந்த கிரிமினலான சோனு நாகரை போலீஸார் கைது செய்துள்ளனர்.