

பிரதமர் நரேந்திர மோடி பொய் வார்த்தைகள கூறி மக்களை ஏமாற்றியதாகவும் அதற்காக மக்கள் அவரை தண்டிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ராம் ஜெத்மலானி கூறினார்.
பிஹார் தேர்தலை குறிப்பிட்டு அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "மோடி மக்களை ஏமாற்றிவிட்டார். அதற்காக அவர் தண்டனை அனுபவிக்க வேண்டும். வரும் தேர்தலில் தோல்வியடைய வேண்டும். எனக்கு பிஹார் சட்டப்பேரவையில் வாக்கு அளிக்கும் அதிகாரம் இருந்தால் நான் நிதிஷ் குமாருக்கு வாக்களிப்பேன். அதற்கு காரணம் மோடியை தோல்வியடைய செய்ய வேண்டும் என்பதே.
பாஜக-வின் தோல்விக்கு பிஹார் தேர்தலே முதல் அடியாக இருக்க வேண்டும். அவர்கள் இந்த ராம் ஜெத்மலானியை முட்டாளாக்கிவிட்டனர். அவர்களை பிஹார் மக்கள் முட்டாளாக்க வேண்டும்.
நரேந்திர மோடியை விளம்பரப்படுத்திய பாவத்துக்கு பரிகாரம் செய்யவே நான் இதனை கூறுகிறேன்." என்றார்.
ராணுவத்தில் ஒரே பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியத்தை வழங்க கோரி நடைபெறும் போராட்டத்தில் முன்னாள் வீரர்களுக்கு ஆதரவாக பங்கேற்ற அவர் இதனை கூறினார்.