பிஹார் தேர்தலில் பாஜக தோற்றாலும் மத்திய அரசுக்கு அச்சுறுத்தல் இருக்காது: காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கருத்து

பிஹார் தேர்தலில் பாஜக தோற்றாலும் மத்திய அரசுக்கு அச்சுறுத்தல் இருக்காது: காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கருத்து
Updated on
1 min read

“பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தோற்றால் மத்திய அரசுக்கு ஒருவகையில் பாதிப்பு இருக்கும். ஆனால், அச்சுறுத்தல் இருக்காது” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் கட்சி பொதுச் செயலாளருமான திக்விஜய் சிங், டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிஹார் சட்டப்பேரவை தேர்த லில் தேசிய ஜனநாய கூட்டணி தோற்றால், அவர்கள் மீது கேள்வி எழும். ஆனால், மத்திய அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படாது. காங்கிரஸ் தலைமையில் 3-வது முறை ஆட்சி அமைய, மதச்சார்பற்ற சக்திகள் ஒன்று சேர வேண்டும் என்று அப்போதே கூறினோம். ஆனால், நடந்தது வேறு. இப்போது மக்கள் தங்களுடைய தவறுகளை புரிந்து கொண்டுள்ளனர்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி யில் என்னவெல்லாம் கிடைத்த னவோ அவற்றை எல்லாம் இப் போது பாஜக ஆட்சியில் இழந்து விட்டனர். பாஜக ஆட்சியில் சகிப்புத் தன்மை போய்விட்டது.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தியை நியமிப்பது குறித்து, சோனியா காந்தியும் காங்கிரஸ் செயற்குழுவும்தான் முடிவெடுக்க வேண்டும். அது எப்போது என்பதை என்னால் கூற இயலாது. ஆனால், ராகுல் காந்தி விரைவில் காங்கிரஸ் தலைவராக வேண்டும் என்று கட்சி தொண்டர்கள் விரும்புகின்றனர்.

இவ்வாறு திக்விஜய் சிங் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in