

டிஎல்எப் நிறுவனத்துடன் நடத்திய நில பேரம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் ஸ்கைலைன் ஹாஸ்பிடாலிட்டிஸ் நிறுவனத்துக்கு ஹரியானா மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஹரியானா மாநில சுங்கம் மற்றும் வரித் துறை சார்பில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வரும் 26-ம் தேதிக்குள் இதற்கு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள் ளது. இது தொடர்பாக வரித்துறை அதிகாரி பிரதாப் சிங் கூறியது:
ஸ்கைலைன் ஹாஸ்பிடா லிட்டிஸ் நிறுவனத்துக்கும் டிஎல்எப் நிறுவனத்துக்கும் இடையே நில பேரம் உட்பட பல ஒப்பந்தங்களும், பண பரிமாற்றங் களும் நடந்துள்ளன. குர்காவ்னில் வர்த்தக கட்டிடங்கள் அமைக்கும் பணிகளுக்கான உரிமம் 2008-ம் ஆண்டு ஸ்கைலைன் ஹைஸ்பிடா லிட்டிஸ் நிறுவனத்துக்கு வழங்கப் பட்டுள்ளது.
அதன் பிறகு அந்த உரிமத்தை ரூ.58 கோடிக்கு டிஎல்எப் நிறுவனத் திடம் விற்றுள்ளனர். அப்போது இந்த உரிமத்தை அடிப்படையாக கொண்டு தாங்கள் வாங்கிய நிலத்தையும் டிஎல்எப் நிறுவனத் துக்கு விற்றுள்ளனர். இது தொடர் பான முழு பணப்பரிமாற்ற விவரம், வரி கட்டிய விவரத்தை கேட்டுள்ளோம் என்றார்.