பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் தீவிரவாதி சுட்டுக்கொலை

Published on

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

தெற்கு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தைச் சேர்ந்த கனிகம் பகுதியில் நேற்றிரவு பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து, தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

தெற்கு காஷ்மீரில் உள்ள சோபியானின் கனிகம் பகுதியில் தீவிரவாதிகள் குறித்து தகவல் கிடைத்ததை அடுத்து அப்பகுதியில் நேற்றிரவு பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து, தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது மறைந்திருந்து தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பாதுகாப்புப் படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.

இதன் விளைவாக அப்பகுதியில் துப்பாக்கிச் சண்டை தொடர்ந்தது. இதில் தீவிரவாதி ஒருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். 2 பாதுகாப்பு வீரர்கள் காயமடைந்தனர்.

கொல்லப்பட்ட தீவிரவாதியின் அடையாளம் கண்டறியப்பட்டு வருகிறது. துப்பாக்கிச் சூட்டில் இரண்டு வீரர்கள் காயமடைந்து மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். துப்பாக்கிச்சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in