

முக்கியப் பிரச்சினைகளில் அமைதி காக்கும் தந்திரத்தை பிரதமர் நரேந்திர மோடி ஆயுத மாகக் கையாளுகிறார் என்று பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதமர் மோடி பிஹாரில் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற் கொண்ட நிலையில், நிதிஷ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறிய தாவது:
ஆரவாரப் பேச்சையும் உண் மைக்கு மாறானவற்றை கூறு வதையும் மோடி வழக்கமாகக் கொண்டுள்ளார். தற்போது அமைதி காக்கும் தந்திரத்தை புதிய ஆயுதமாகக் கையாளுகிறார். கட்டுக்கதைகள் தொடர்கின்றன. எனவே பிஹாரில் செயல்திறன் மிக்க ஆட்சி தொடர நாம் இணைந்து செயலாற்றுவோம்.
வெளிநாடுகளில் பதுக்கி வைக் கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வருவது, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து ஆகிய வாக் குறுதிகள் பற்றி பிரதமர் பேச மறுக்கிறார். கடந்த மக்களவை தேர்தலின்போது அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் பிரதமர் வசதியாக மறந்துவிட்டார்.
தொட்டதெற்கெல்லாம் சமூக வலைதளங்களில் கருத்து கூறும் பிரதமர், நாட்டை உலுக்கும் பிரச் சினைகளில் மவுனம் காக்கிறார்.
ஹரியாணாவில் 2 தலித் குழந்தைகளும், உ.பி.யில் இஸ்லாமிய முதியவரும் கொடூர மாகக் கொல்லப்பட்டது, பருப்பு விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்துள்ளது குறித்தெல்லாம் பிரதமர் எந்த வார்த்தையும் கூறவில்லை.
தேர்தலுக்குப் பிறகு மோடி பிஹார் வருவது அரிதாகிவிடும். எனவே மோடியை நேரில் காண் பதற்கு ஒரு வாய்ப்பாக கருதி அவரது கூட்டங்களுக்கு மக்கள் செல்கின்றனர். பிஹாரின் பிரச் சினைகளை காது கொடுத்து கேட்க சிறிது நேரம் ஒதுக்குமாறு பிரதமரி டம் கேட்டிருந்தேன். தேர்தல் பிரச் சாரம் மூலமாவது அவர் பிஹா ருக்கு நேரம் ஒதுக்கியுள்ளதற்கு நன்றி கூறுகிறேன். இவ்வாறு நிதிஷ் கூறியுள்ளார்.