இயற்கை எரிவாயு விலை: நரேந்திர மோடி ஆலோசனை

இயற்கை எரிவாயு விலை: நரேந்திர மோடி ஆலோசனை
Updated on
1 min read

இயற்கை எரிவாயு விலையை உயர்த்துவது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி, பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோருடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.

இதுதொடர்பாக கடந்த மூன்று நாள்களில் அமைச்சர்களுடன் மோடி ஆலோசனை நடத்துவது இது இரண்டாவது முறையாகும். கடந்த வெள்ளிக்கிழமை 5 மணி நேரம் தீவிர ஆலோசனை நடந்தது.

இந்தியாவில் எண்ணெய் வளம் கண்டறியப்பட்ட இடங்களிலிருந்து எண்ணெயை அகழ்ந்து எடுக்க 10 லட்சம் பிரிட்டன் தெர்மல் அலகுக்கு 4.2 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.253) விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்த விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் கோரிக்கை விடுத் தன. இதையடுத்து காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ரங்கராஜன் குழுவின் பரிந்துரையின் பேரில் 10 லட்சம் பிரிட்டன் தெர்மல் அலகுக்கு 8.4 அமெரிக்க டாலர்கள் என விலையை இரட்டிப்பாக்கச் சம்மதித்தது.

தேர்தல் காரணமாக இந்த பரிந்துரையை அமல்படுத்துவது ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போதைய பாஜக அரசு இயற்கை எரிவாயுவுக்கான விலை உயர்வு குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

விலையை இரட்டிப்பாக்கும் முடிவு தனியார் பெருநிறுவனங் களுக்குச் சாதகமாக அமையும் எனக்கூறி பாஜக எதிர்க்கட்சியாக இருந்தபோது கடுமையாக எதிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in