

அருணாச்சல பிரதேசத்தில் ஐக்கிய ஜனதாதள கட்சி எம்எல்ஏக்கள் 6 பேர் பாஜகவில் இணைந்தது இயல்பான ஒன்று என அக்கட்சி எம்.பி. தபிர் காவோ கூறியுள்ளார்.
அருணாச்சல பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் மொத்தம் 7 எம்எல்ஏக்கள் இருந்த நிலையில் தற்போது 6 பேர் பாஜகவுக்கு சென்றுள்ளனர்.
ஐக்கிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் ரும்காங் சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த தாலேம் தபோ, ஹயெங் மங்ஃபி (சயாங் தாஜோ தொகுதி), ஜிகே டகோ (தாலி), டோர்ஜி வாங்டி கர்மா (கலக்தாங்), டோங்ரு சியோங்ஜு (போம்டிலா), காங்காங் டாகு (மரியாங் கேகு)ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.
முன்னதாக கடந்த நவம்பர் 26 அன்று, ஜே.டி.யு சியோங்ஜு, கர்மா மற்றும் டாகுவுக்கு "கட்சி எதிர்ப்பு" நடவடிக்கைகளுக்காக காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதோடு அவர்களை இடைநீக்கம் செய்தது.
அருணாச்சல மக்கள் கட்சியின் லிகாபாலி தொகுதி எம்எல்ஏ ஒருவரும் பாஜகவில் இணைந்துள்ளார்.
இதுகுறித்து அருணாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. தபிர் காவோ கூறியுள்ளதாவது:
‘‘அருணாச்சல பிரதேசத்தில் ஐக்கிய ஜனதாதள கட்சி எம்எல்ஏக்கள் 6 பேர் பாஜகவில் இணைந்தது இயல்பான ஒன்று. இது தாய் வீடு திரும்பியது போன்றது.’’ எனக் கூறினார்.