Last Updated : 25 Dec, 2020 02:45 PM

 

Published : 25 Dec 2020 02:45 PM
Last Updated : 25 Dec 2020 02:45 PM

மம்தாவின் சிந்தனை மே.வங்கத்தை அழித்துவிட்டது; 70 லட்சம் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் உதவி கிடைக்காதது பற்றி எதிர்க்கட்சிகள் பேசமாட்டார்களா?: பிரதமர் மோடி தாக்கு

விவசாயிகளுடன் காணொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றிய காட்சி : படம் ஏஎன்ஐ

புதுடெல்லி


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் சித்தாந்தத்தால், சிந்தனையால் மாநிலமே அழிந்துவிட்டது. 70 லட்சம் விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் உதவி கிடைக்கவில்லை. இதுபற்றி எல்லாம் ஏன் எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்பதில்லை என்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிம் கிசான் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டில் 3-வது கட்டமாக ரூ.2 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து, ரூ.18 ஆயிரம் கோடியை விடுவித்தார். அதன்பின் காணொலி மூலம 6 மாநில விவசாயிகள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் சிந்தனைகள், சித்தாந்தங்களால் 70 லட்சம் விவசாயிகள் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறமுடியாமல் இருக்கிறார்கள், பிஎம் கிசான் திட்டத்தை மேற்கு வங்கத்தில் செயல்படுத்தாமல் இருக்கும் மம்தா குறித்து எதிர்க்கட்சிகள் எந்தக் கேள்வியும் கேட்காமல் மவுனமாக இருக்கிறார்கள். மம்தாவின் சிந்தனை மேற்கு வங்க மாநிலத்தையே அழித்துவிட்டது.

விவசாயிகள் திட்டத்தில் ஊழல் நடப்பதை முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தேசத்தின் நோய் என்று குறிப்பிடுவார். பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1.10லட்சம் கோடி சேர்க்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தின் உதவியின் மூலம் இந்த திட்டத்தில் எந்தவிதமான ஓட்டைகளும் இல்லாமல் பணம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் உள்ள விவசாயிகள் இந்த திட்டத்தில் பயன்பெறுவதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். அனைத்து மாநில அரசுகளும் இந்த திட்டத்தை அனுமதித்துள்ளபோது, மேற்கு வங்கம் மட்டும் செயல்படுத்தவில்லை.

அரசியல் காரணங்களுக்காக மேற்கு வங்க அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த மறுக்கிறது. இதனால் 70 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவது தடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு எதிராகச் செயல்படும் அவரின் செயல்பாடுகள் என்னை வேதனைப்படுத்துகிறது. ஆனால், ஏன் எதிர்க்கட்சிகள் மவுனமாக இருக்கிறார்கள்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படுகிறது. ஆனால், மேற்கு வங்கத்தில் பிஎம் கிசான் திட்டத்தை செயல்படுத்தாதது குறித்து எந்தப் போராட்டமும் நடத்தப்படாதது வியப்பாக இருக்கிறது.

23 லட்சத்துக்கும் மேலான விவசாயிகள் ஆன்-லைன் மூலம் இந்ததிட்டத்துக்கு விண்ணப்பித்துள்ளார்கள். ஆனால், மாநில அரசு அவர்களின் விண்ணப்பங்களை பிரசீலிக்காமல் கிடப்பில் போட்டுள்ளது.
15 ஆண்டுக்கு முந்தைய மம்தாவின் பேச்சைக் கவனித்தால், இந்த சிந்தனை எவ்வாறு மேற்கு வங்கத்தை அழித்திருக்கிறது என உங்களுக்குத் தெரியவரும். பல ஆண்டுகளாக இந்த மாநிலத்தை ஆண்டவர்களின் சித்தாந்தங்களால்தான் மாநிலம் அழிக்கப்பட்டுள்ளது என ஒவ்வொருவரும் அறிவர்.

சுயநல நோக்கம் கொண்ட கொள்கைகல் உடையவர்களை மக்கள் நெருக்கமாக கவனித்து வருகிறார்கள். மேற்கு வங்கத்தில் உள்ள விவசாயிகளின் நலனுக்ாக கட்சிகள் பேசுவதில்லை, விவசாயிகள் எனும் பெயரில் டெல்லி மக்களை துன்புறுத்தி, பொருளாதாரத்தை அழித்து வருபவர்கள் பற்றியும் எதிர்க்கட்சிகள் பேசுவதில்லை.

பஞ்சாப்பில் விவசாயிகளை தவறாக வழிநடத்த எதிர்க்கட்சிகளுக்கு நேரம் இருக்கிறது. ஆனால், கேரளாவில் இந்த திட்டத்தை செயல்படுத்த கேரளாவில் நேரமில்லை. எதற்காக எதிர்க்கட்சிகள் இரட்டைக் கொள்கையுடன் நடந்து கொள்கிறார்கள். விவசாயிகள் பெயரில் தங்கள் அரசியல் அடையாளத்துடன் விளையாடுபவர்கள், நிச்சயம் இந்த உண்மையைக் கேட்க வேண்டும்
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x