விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்தவே வேளாண் சட்டங்கள்: மத்திய அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா

விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்தவே வேளாண் சட்டங்கள்: மத்திய அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா
Updated on
1 min read

விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்தவே மூன்று வேளாண் சட்டங்களை நாடாளுமன்றம் நிறைவேற்றியது என மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முற்றிலும் உறுதி பூண்டுள்ளது. விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்த மூன்று வேளாண் சட்டங்களை நாடாளுமன்றம் நிறைவேற்றியது.

தற்போதுள்ள தடைகளை அகற்றி விவசாயிகள் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவது தான் மத்திய அரசின் நோக்கம். இந்த புதிய மசோதாக்கள், விவசாயிகளுக்குப் புதிய உரிமைகளையும், வாய்ப்புகளையும் அளிக்கும். இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன.

இவ்வாறு மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in